படைத்துறை
Appearance
(இராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
படைத்துறை அல்லது இராணுவம் என்பது ஒரு நாட்டிற்காக வன்முறையைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது ஒரு நாட்டின் அரசையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதை, அதன் பலத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- குடிமக்களையே தன் படைவீரர்களாகப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாளன் வேறு எந்தக் கொடிய பகைவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- படைபலம் படைத்த திர்க்கதரிசிகள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படை பலமற்றவர்களே தோல்வியடைந்திருக்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- படைப் பயிற்சியைவிட இன்பக் கேளிக்கைகளையே பெரிதாக மதிக்கிற ஆட்சியாளர்கள், அதிரைவில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.-நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- இராணுவத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பெருந்திறமைசாலிகளாக இருந்தாலொழிய அந்தப் பீட்த்தில் நிலைத்திருக்க முடியாது.-நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.