இறப்பு
Appearance
இறப்பு அல்லது மரணம் என்பது உலகில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் நிகழும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
- ஒரு புத்திசாலியால் தனது வாழ்க்கையின் இறுதிநாளையும் வளமாக எதிர்கால வாழ்க்கையாக மாற்றிவைக்க முடியும். - கன்பூசியஸ்
- நம் எதிரிகளும் நண்பர்களும் நம் கண் முன்பே ஊர்ந்து சென்றுவிடுகின்றனர். நாமும் மரிக்க வேண்டிய பொதுவான சட்டத்திற்கு அடங்கியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விரைவிலே நாம் போய்ச் சேருமிடத்தில் நம்முடைய கதி நிரந்தரமாக உறுதி செய்யப்படும். -ஜான்ஸன்[1]
- மரணம் வாழ்வின் சிகரம்: மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர். -யங்[1]
- நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர்: கோடை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள். - வோர்ட்ஸ்வொர்த்[1]
- மரணம் இயற்கையானது மிகவும் அவசியமானது பிரபஞ்சத்தில் எங்குமுள்ளது. இததகையதை இறைவன் மனித சமூகத்திற்குத் தீமையாக அமைத்திருக்கவே முடியாது. - ஸ்விஃப்ட்[2]
- மரணம் நமக்கு வேண்டியவர் ஒருவர்மீது கை வைக்கும் பொழுதுதான். மரணத்தைப்பற்றி முதன் முதலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். - திருமதி டி ஸ்டேல்[2]
- மனிதர்கள் வாழ்க்கையைத் தாங்கியிருக்க வேண்டும் என்பதற்காகத் தெய்வங்கள் மரணத்தின் இன்பத்தை அவர்கள் உணர முடியாதபடி மறைத்து வைக்கின்றன. - லூகான்[2]
- ஒருவன் வெற்றி வீரனாகவோ, அரசனாகவோ, நீதிபதியாகவோ வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவன் மனிதனாகவே மரிக்க வேண்டும். - டேனியல் வெப்ஸ்டர்[2]
- உன்னை மரணம் எங்கும் எதிர்பார்த்திருக்கிறது. ஆதலால், நீ தன்னறிவோடு அதை எங்கும் பார்த்திரு. - குவார்லெஸ்[2]
- சாக்ரடிஸ் ஒரு தத்துவ ஞானியைப் போல இறந்தார். ஏசு கிறிஸ்து ஒரு தெய்வத்தைப் போல உயிர் நீத்தார். - ரூஸோ[2]
- உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. - திருவள்ளுவர்[2]
- நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு. - திருவள்ளுவர்