இலரி கிளின்டன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இலரி டயான் ரோட்டம் கிளின்டன் (ஹிலாரி கிளின்டன்; ஹிலாரி கிளிண்டன்)(Hillary Diane Rodham Clinton) ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர். அதற்கு முன்னால் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் சீமாட்டி" என்னும் பட்டத்துடன் இருந்தார். அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணி இவராவார்.

இவரின் மேற்கோள்கள்[தொகு]

 • வாக்களித்தல் என்பது ஒவ்வொரு குடிமகனின் அரும்பெரும் உரிமையாக உள்ளது.
 • என்னால் என்ன செய்யப்பட்டது என்பதைப் பொருத்து மக்களால் என்னை மதிப்பிட முடியும்.
 • உலகத்தின் சவால்களை எந்த நாடும் தனியாக சமாளிக்க முடியாது.
 • குழந்தையின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் பெற்றோர்களே.
 • ஜனநாயகத்துக்கான மாற்றம் நிகழும்போது, போராட்டங்களுக்கு முடிவு என்பதில்லை.
 • கடினமான மனிதர்கள் கடினமான முடிவுகளையே தேர்ந்தெடுக் கிறார்கள்.
 • நேற்றைய தினம் போன்று வேறு ஒரு தினம் இருக்கப் போவதில்லை.
 • மீண்டும் கதவைத் திறந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழி மன்னிப்பு.
 • நியாயமான விளையாட்டிற்கும், விளையாடப்படும் விளையாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது.
 • உங்களுக்கு நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டியது அவசியம்.
 • மனித உரிமைகளே, பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளே மனித உரிமைகள்.
 • பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகளானது 21 ஆம் நூற்றாண்டின் முடிவுபெறாத செயல்பாடு என்பதை நான் நம்புகிறேன்.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=இலரி_கிளின்டன்&oldid=14813" இருந்து மீள்விக்கப்பட்டது