இவான் மெய்ஸ்கி

விக்கிமேற்கோள் இலிருந்து

இவான் மிகைலோவிச் மைஸ்கி (Ivan Mikhailovich Maisky" உருசிய மொழி: Ива́н Миха́йлович Ма́йский) (19 சனவரி 1884 - 3 செப்டம்பர் 1975) என்பவர் ஒரு சோவியத் தூதர், வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய இராச்சியத்திற்கான சோவியத் ஒன்றியத்தின் தூதராக குறிப்பிடத்தக்கவராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

காந்தி லெனின் ஒப்பீடு[தொகு]

  • லெனின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பெரிய ஆல்ப்ஸ் மலையாகவே தோன்றுவார். காந்தியோ அட்டையில் செய்யப்பட்ட செயற்கை மலையாகவும், வேகமாக உடைந்து சிதறுகிறவராகவும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் அறவே மறக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைக்கூடையில் மட்டுமே இடம்பெற்றவராகவும் தோன்றக்கூடும். விலையுயர்ந்த உலோகங்களையும் அவற்றைப் போலவே தோற்றம் தரும் போலிகளையும் காலமும் சம்பவங்களும்தான் பிரித்துக் காட்டுகின்றன!” (காங்கிரஸிலிருந்து காந்தி (தற்காலிகமாக) விலகிவிட்டார் என்ற செய்திக்குப் பிறகு, 04.11.1934- இல் தனது நாட்குறிப்பில் மெய்ஸ்கி பதிவுசெய்தது)[1]

குறிப்புகள்[தொகு]

  1. லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா
"https://ta.wikiquote.org/w/index.php?title=இவான்_மெய்ஸ்கி&oldid=17688" இலிருந்து மீள்விக்கப்பட்டது