உசைன் போல்ட்
உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாறும்.
இவரது பொன்மொழிகள்
[தொகு]- என்னைப் பொருத்தவரை, நான் என்ன செய்யவேண்டுமோ அதிலே கவனம் செலுத்துகிறேன்.
- திரும்ப திரும்பச் செய்வது என்பது மற்ற எதேயும்விட கடினமானச் செயல்
- நான் எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு முயற்சிக்கிறேன்.
- என்னைவிட சிறப்பாக தொடங்குபவர்கள் இருக்கிறார்கள் ஆனால், நான் வலிமையாக நிறைவு செய்பவன்.
- என்னால் என்ன செய்யமுடியும் என்பது எனக்கு தெரியும் அதனால், மற்றவர்களின் கருத்து மற்றும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை இல்லை.
- எந்தவிதமான வழியிலும் தொல்வியடைவதை நான் விரும்பவில்லை.
- வரலாற்றில் நான் இடம்பெற வேண்டுமென்றால், என் இலக்கினை நான் அடையவேண்டும்.
- சில நேரங்களில் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் கவனிப்பதில்லை.
- பய்தயத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தால், நீங்கள் அதை சிறிதளவு இழக்க நேரிடலாம்.
- உங்களுக்கான நல்ல நாட்கள் மற்றும் மோசமான தாட்கள் ஆகிய இரண்டுமே இருக்கவேண்டும்.[1]
வெளி இணைப்புக்கள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தி இந்து வணிக வீதி இணைப்பு, 2016 அக்டோபர் 10