உண்ணுதல்
Appearance
உணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர்களும், விலங்குகளும் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம்.
- நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள். சாக்கிரட்டீசு[1]
- உண்பதன் இன்பம் மதிப்புயர்ந்த பொருள்களைத் தாளிப்பதிலோ நறுமணத்திலோ இல்லை. அது உன்னிடமேயுள்ளது. உன் உழைப்பே உருசியளிக்கின்றது. - ஹொரேஸ்[2]
- விருந்துக்குச் செல்லலாம்; ஆனால், கொஞ்சம் பசியிருக்கும் போதே எழுந்துவிட வேண்டும். - ஹெர்ரிக்[2]
- ஆரோக்கியத்திற்காக மருந்துகளை நிறுத்தோ அளந்தோ உட்கொள்கிறோம்; அதே போல, உணவையும் அளவோடு புசிக்க வேண்டும். - ஸ்கெல்டன்[2]
- பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான். -ஸர் வால்டர் ராலே[2]
- ஒருவன் வாழ்வதற்காக உண்ண வேண்டும்; உண்பதற்காக வாழக்கூடாது. - ஃபிராங்க்லிகள்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 122. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.