உருசிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இதில் உருசிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

 • அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையராயிருங்கள்.
 • அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும், அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு.
 • இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை.
 • ஒருத்தி இனிமையா யிருக்கிறாள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிட்டது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம்.
 • ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காமலிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான்.
 • ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன்
 • கன்னியின் இதயம் இருண்ட கானகம்.
 • காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது.
 • சிரிக்கிற பெண்ணையும் அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம்.
 • செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி.
 • தினசரி க்ஷவரம் செய்துகொள்வதைவிட வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது.
  (ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவியரிடம் சொல்வது வழக்கம்.)
 • பிரமசாரி தண்ணீரில்லாத வாத்துப் போன்றவன்.
 • மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது
"https://ta.wikiquote.org/w/index.php?title=உருசிய_பழமொழிகள்&oldid=37003" இருந்து மீள்விக்கப்பட்டது