உ. வே. சாமிநாதையர்

விக்கிமேற்கோள் இலிருந்து

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சுயசரிதையில் இருந்து[தொகு]

காகிதம் என்பதறியா மக்கள் ஓலைகளில் எழுதி வைத்திருந்ததைப் படிக்கும் போது ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி[தொகு]

இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. ரகரத்துக்கும் (துணைக்) காலுக்கும் வேற்றுமை தெரியாது. சாபம் சரபமாகத் தோன்றும் ஓரிடத்தில் சரடு என வந்திருந்தது. அந்த வார்த்தையைப் பலகாலம் சாடு என்று நினைத்தேன். இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதம் தெரியாமல் மயங்கின இடங்கள் பல.

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=உ._வே._சாமிநாதையர்&oldid=38187" இலிருந்து மீள்விக்கப்பட்டது