ஊக்கம்
Appearance
பழமொழிகள்
[தொகு]- அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
- இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
- கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
- கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
- கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
- காய்த்த மரம் கல் அடிபடும்.
- காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
- காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
- குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
- செய்வன திருந்தச் செய்.
- சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
- நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
- பதறாத காரியம் சிதறாது.
- பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
- மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
- முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
- வாழ்வும் தாழ்வும் சில காலம்.
திருக்குறள்கள்
[தொகு]- உடைய ரெனப்படுவ தூக்கம்; அஃதிலார்
- உடைய துடையரோ மற்று?
- கருத்து - ஒருவர் ஒன்றை உடையவர் எனின், அவர் ஊக்கத்தை உடையவரே;
- அவ்வூக்கம் இல்லாதவர் மற்றை எவற்றை உடையவராயினும் உடையவர்
- ஆவரோ?
- உள்ள முடைமை உடைமை; பொருளுடமை
- நில்லாது நீங்கி விடும்..
- கருத்து - ஊக்கம் உடைமையே நிலையான உடைமையாகும்;
- பொருளுடைமையோ, நிலைபெறலின்றி நீங்கிப் போகும்.
- ஆக்கம் இழந்தே மென் றல்லாவார்; ஊக்கம்
- ஒருவந்தம் கைத்துதுடை யார்..
- கருத்து - ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாக உடையவர்,எம் செல்வத்தை
- இழந்து விட்டோம் என்று வருந்திக் கூறும் நிலைக்கு ஆட்படார்.
- ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்; அசைவிலா
- ஊக்க முடையா னுழை
- கருத்து - தளராத ஊக்கம் உடையவனிடத்து வழிகேட்டுச் செல்வம்
- தானே வந்து சேரும்.