எதிர்காலம்
Appearance
எதிர்காலம் (Future) என்பது நிகழ்காலத்திற்குப் பிறகான காலம். இது குறித்த மேற்கோள்கள்
- நாம் எப்பொழுதும் எதிர்காலத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறோம்; நிகழ்காலம் நமக்குத் திருப்தியளிக்கவில்லை. நமது இலட்சியம் எதுவாயிருப்பினும், எதிர்காலத்திலேயுள்ளது. - கில்லெட்[1]
- இளைஞர்களுக்கு எதிர்காலம் ஒரு தேவதை உலகமாக உள்ளது. -ஸாலா[1]
- நாளை என்ற ஒவ்வொரு நாளைக்கும் இரண்டு கைப்பிடிகள் உள்ளன. கவலை என்ற பிடியினாலோ. நம்பிக்கை என்ற பிடியினாலோ நாம் அதைப் பிடித்துக்கொள்ளலாம்[1]
- எதிர்காலமே நமது குறிக்கோள். நாம் ஒரு போதும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. வாழப்போவதாக நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம். இன்பமடைவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே. நாம் இன்பமில்லாமல் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. - பாஸ்கல்[1]
- எதிர்காலத்திற்காக நாம் நம்மைத் தயாரித்துக்கொள்ளும் சிறந்த முறை, நிகழ்காலத்தைப் பேணிக்கொள்வதாகும். நம் கடைசிக் கடமை வரை செய்து முடிக்க வேண்டும். - ஜி. மாக்டொனால்ட்[1]
- பழமையை எண்ணி வருந்திப் பார்க்க வேண்டாம். அது மீண்டும் வரப்போவதில்லை; நிகழ்காலத்தை அறிவோடு சீர்திருத்திக்கொள் அச்சமில்லாமல், ஆண்மையுள்ள இதயத்துடன், நிழல் போலக் காணும் எதிர்காலத்தை எதிர் கொள்ளச் செல்வாயாக. - லாங்ஃபெல்லோ[1]