எமிலி டிக்கின்சன்

விக்கிமேற்கோள் இலிருந்து

எமிலி டிக்கின்சன் (Emily Dickinson, டிசம்பர் 10, 1830 – மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். இவர் ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே அவனது நடத்தை. மாறாக, அவன் என்ன நினைக்கிறான், உணர்கிறான் அல்லது நம்புகிறான் என்பதல்ல.
  • எதுவுமே சொல்லாமலிருப்பது... சில நேரங்களில் அதிகமானவற்றை சொல்கின்றது.
  • தோல்விக்கு எல்லையை முடிவு செய். ஆனால், எல்லையற்ற முயற்சியைக் கொண்டிரு.
  • உங்களது மூளையானது இந்த ஆகாயத்தை விட பறந்து விரிந்த ஒன்று.
  • மன வலிமையை மேம்படுத்திக்கொள்ள மக்களுக்கு கடினமான தருணங்கள் தேவைப்படுகின்றன.
  • எப்பொழுது விடியல் வருமென்று அறியாமல், ஒவ்வொரு கதவாக நான் திறக்கிறேன்.
  • தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா.
  • அழிவில்லாத மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் விஷயமாக உள்ளது அன்பு.
  • அமுதத்தின் சுவையை அறிந்துகொள்ள, வறுமையை அனுபவித்திருக்க வேண்டும்.
  • நடந்து முடிந்தவை எல்லாம் ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல.
  • ஒருபோதும் மீண்டும் திரும்ப வராத ஒன்றே, வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுகின்றது.
  • உண்மையே எனது தேசம்.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=எமிலி_டிக்கின்சன்&oldid=14805" இலிருந்து மீள்விக்கப்பட்டது