உள்ளடக்கத்துக்குச் செல்

எம். வி. வெங்கட்ராம்

விக்கிமேற்கோள் இலிருந்து

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

மேற்கௌள்கள்

[தொகு]
  • என் நண்பர்கள்போல நான் என் எழுத்துப் பாணியை நான் அமைத்துக் கொள்ளவில்லை. என் சகாக்கள் அவரவர்களுக்கென ஒரு பாதையை அமைத்து, அதிலேயே பயணித்தபடி இருந்தனர். நான் ஒருமுறை சென்ற பாதையில் மறுமுறை சென்றதில்லை. புதுப்புது பாதைகைளை உருவாக்கி, அதில் பயணித்தபடி இருந்தேன். அதற்கு என் நாவல்களும் சிறுகதைகளுமே சாட்சியங்கள்...[1]
  • என் கதைகளில் நான் என்னையே தேடினேன். நான் அறிந்ததை, கேட்டதை, பார்த்ததை, பேசியதை, அனுபவித்ததை, தொட்டதை, விட்டதை, சிந்தித்ததையே எழுதினேன். எழுதி எழுதி தீர்த்தேன். பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும்.[1]
  • வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்.[2]
  • புரியவில்லை என்று சொல்பவர்கள் பத்து தடவை படிக்க வேண்டியதுதான். பத்து தடவை படிக்க பொறுமை இல்லை என்றால், பேசாமல் போட்டுவிட்டவேண்டியதுதான். படிக்கும்போதே, காதில் சப்தம் கேட்கிறது - பயமாய் இருக்கிறது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது எனக்கு வெற்றிதான். ஆனால் புரியவில்லை என்றால்... என்ன புரியவில்லை? சிலருக்குப் புரியவில்லை என்பதற்காக ஒரு படைப்பைத் தரக்குறைவானது என்று சொல்லிக்கொள்ள நான் தயாராய் இல்லை. எவ்வளவு எளிமையாக சொன்னால்கூட சிலருக்கு சில விஷயங்கள் புரியாது.
    • 'சாரதா'வுக்கு 1994 இல் எம். வி. வெங்கட்ராம் அளித்த நேர்காணலில்.
  • தமிழ்நாட்டில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு மானங்கெட்ட பிழைப்பு.
    • (1992 இல் காதுகள் புதின வெளியீட்டு விழாவில்)

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=எம்._வி._வெங்கட்ராம்&oldid=19766" இலிருந்து மீள்விக்கப்பட்டது