எஸ்தோனிய பழமொழிகள்
Jump to navigation
Jump to search
இப்பக்கத்தில் எஸ்தோனிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள்.
- ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.
- ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)
- காதலில் துரு ஏறாது.
- தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.
- புதர்களெல்லாம் பெண் இனம். [பெருகக் கூடியவை.]
- வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது, கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது.