உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஏ. டாங்கே

விக்கிமேற்கோள் இலிருந்து
எஸ். ஏ. டாங்கே

எஸ். ஏ. டாங்கே (Shripad Amrit Dange 10 அக்டோபர் 1899–22 மே 1991) இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கியவர்களில் முன்னணியாளரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

காந்தி லெனின் ஒப்பீடு[தொகு]

  • “காந்தி தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் பிற்போக்கான சிந்தனையாளர், மதத்திலும் தனிமனிதர்களின் மனசாட்சி மீதும் நம்பிக்கை வைப்பவர். லெனினோ பொருளாதார ஒடுக்குமுறைகளுக்குக் கட்டமைப்பிலேயே நிலவும் காரணங்கள் எவையென்று அறிந்தவர். அனைத்து மக்களையும் திரட்டி அந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முயன்றவர். கடந்துவிட்ட பழைய காலத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறவர் காந்தி. நவீன நாகரிகத்தில் கிடைத்த சாதனைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுபவர் லெனின்” (இவர் 1921 இல் எழுதிய ‘காந்தியும் லெனினும்’ என்ற சிறு நூலில்)[1]

குறிப்புகள்[தொகு]

  1. லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா
"https://ta.wikiquote.org/w/index.php?title=எஸ்._ஏ._டாங்கே&oldid=17989" இலிருந்து மீள்விக்கப்பட்டது