ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுனின் மர்ம நாவலாகும். இந்நாவல் ஹர்வர்ட் ஆசிரியர் ராபர்ட் லங்க்டோன்-ஐ கதாநாயகனாக அறிமுகப் படுத்துகின்றது. இவரே டேன் பிரவுனின் பின்தொடர்ச்சி நாவல்களான தி லாஸ்ட் சிம்பல் மற்றும் டா வின்சி கோட் -டிலும் கதாநாயகன்.இக்கதை ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்துக்கும் , இல்லுமினாட்டி எனப்படும் ரகசிய சமூகத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விவரிக்கின்றது.

வசனங்கள்[தொகு]

விட்டோரியா வெட்ற: மொழி அல்லது உடை போன்றதே மதம்.நாம் வளரும் இடத்தின் பழக்க-வழக்கங்களை நோக்கியே பயணிக்கிறோம்.ஆனால்,கடைசியில் நாம் அறிவிக்கும் விஷயம் ஒன்றே.வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளது என்பதே. நம்மை உருவாக்கியவரை நாம் நன்றியுடன் அணுகுகிறோம்.
ராபர்ட் லங்க்டோன்: நாம் எங்குப் பிறக்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் கிறிஸ்துவரோ, (அல்ல) இஸ்லாமியரோ ஆகிறோம் என்று சொல்கிறீர்களா?
விட்டோரியா வெட்ற:அது தெளிவாகத் தெரியவில்லையா ? உலகம் முழுதும் மதங்கள் பரவிக் கிடப்பதைப் பாருங்கள்.
ராபர்ட் லங்க்டோன்:அப்படியானால் நம்பிக்கை தற்போக்கானதா?
விட்டோரியா வெட்ற:நம்பிக்கை உலகளாவியது.அதை நாம் புரிந்துகொள்ளும் முறைகள் தன்னிச்சையானவை.நம்மில் சிலர் யேசுவிடம் பிரார்த்திக்கிறோம்,சிலர் மெக்கா செல்கிறோம்,சிலர் அணுக்கூறுகளை ஆய்வு செய்கிறோம். ஆனால், முடிவில் நாம் அனைவரும் நம்மிலும் மேலான உண்மையைத் தேடுகிறோம்.

ராபர்ட் லங்க்டோன்: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
விட்டோரியா வெட்ற:கடவுள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.கடவுளை நான் புரிந்து கொள்ள இயலாது என்பதை என் மனம் சொல்கிறது. அதை நான் செய்யக் கூடாது என்பதை என் இதயம் சொல்கிறது.

ஆசிரியர்: தீவிரவாதத்திற்கு ஒரே குறிக்கோள். அது என்ன?
மாணவன் 1: அப்பாவி மக்களைக் கொல்வதா?
ஆசிரியர்: தவறு. மரணம் தீவிரவாதத்தின் துணைப்பொருள்.
மாணவன் 2: பலத்தின் வெளிப்பாடா?
ஆசிரியர்: அல்ல.பலகீனமானவர்களால் மற்றவர்களை இணங்கும்படி தூண்ட இயலாது.
மாணவன் 3: நடுக்கம் ஏற்படுத்தவா?
ஆசிரியர்: சுருக்கமாகச் சொன்னால்.தீவிரவாதத்தின் குறிக்கோள் பயத்தையும் , நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே. நம்பிக்கையைப் பயம் அங்கே ஆள்கிறது. பொதுஜனத்தில் பரபரப்பு ஏற்படுத்தி..எதிரியை உள்ளிருந்து பலம இழக்கச் செய்கிறது. இதை எழுதிக் கொள்ளுங்கள். பெருங்கோபத்தின் வெளிப்பாடல்ல தீவிரவாதம். தீவிரவாதம் ஒரு ராஜதந்திரம்.வீழாத அரசின் முகப்பைக் கிழித்தால்,அம்மக்களின் நம்பிக்கையை நீங்கள் அகற்றுகிறீர்கள்.

கமேர்லேங்கோ கார்லோ வெனட்ரேச்சா : விஞ்ஞானம் பொருத்தமற்றது. விஞ்ஞானம் கொல்லும்,அதே விஞ்ஞானம் குணப்படுத்தும்.அது அவ்விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் ஆன்மாவைப் பொறுத்தது. எனக்கு அவ்வான்மா மேல்தான் நாட்டம்.