ஏ. ஆர். ரகுமான்

விக்கிமேற்கோள் இலிருந்து

அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.

மேற்கோள்கள்[தொகு]

ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில்[தொகு]

  • என்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அன்பு மற்றும் வெறுப்பு இவற்றில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். இதோ இங்கிருக்கிறேன்.
ஆஸ்கர் விருது பெற்றபோது அந்த மேடையில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
  • எல்லா புகழும் இறைவனுக்கே.
  • என் தந்தையின் ஆசியால் தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மை தான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன்.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஏ._ஆர்._ரகுமான்&oldid=15055" இலிருந்து மீள்விக்கப்பட்டது