ஐரோம் சர்மிளா
Jump to navigation
Jump to search
இரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும். ஆகஸ்ட் 9, 2016 அன்று தன்து 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இவரின் சொற்கள்[1][தொகு]
- என்னால் என் சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டபோது, அகிம்சை வழியில் எனக்கு அது (உண்ணா நோன்பு) ஒன்றே வழியாகத் தெரிந்தது.
- எந்த உணவையும் பார்த்து அப்படி ஒரு வேட்கைக்கு ஆளானதில்லை. ஆனால், சில சமயங்களில் தண்ணீரைப் பார்த்து அலாதியான தாகம் ஏற்படும்.
- உள்ளுணர்வு சொல்வதைக் கேட்கிறேன். விளைவுகளை நான் கணக்கிடவில்லை. யார் எவ்வளவு பலசாலியாக இருந்தால் என்ன, மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் எதுவும் சாத்தியம்.
- மணிப்பூரில் வீடுகள்தோறும் போய்க் கேளுங்கள். இதுவரை எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ராணுவப் படைகள் செய்த அட்டூழியங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் நாளெல்லாம் சொல்வார்கள்.
- என் கவிதைகள்... அவற்றை எப்படிச் சொல்வது? அவை எல்லாம் என்னுடைய புகார்கள், புலம்பல்கள். அப்படித்தான் இப்போது தோன்றுகிறது.
- அன்பு ஒன்றுதான் என்னிடமுள்ள ஒரே செய்தி. அன்பின் வழி அரசியலை அணுகி ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை வெளியேற்றிய தந்தையின் வழித்தோன்றல்கள் நாம். அந்த வழியை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சமஸ் (2016 செட்பம்பர் 9). அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி!- இரோம் ஷர்மிளா பேட்டி. செவ்வி. தி இந்து. Retrieved on 9 செப்டம்பர் 2016.