உள்ளடக்கத்துக்குச் செல்

ஒழுக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஒழுக்கம் மனிதன் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

ஈ. வெ. இராமசாமி[தொகு]

 • ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்.[1]
 • பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.[1]
 • பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.[1]
 • உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக்கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக, நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும். பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளரமுடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.[2]

ஜோதிராவ் புலே[தொகு]

 • அறிவில்லாதபோது புத்திசாலித்தனம் இழக்கப்படுகிறது. புத்தியில்லாதபோது ஒழுக்கம் இழக்கப்படுகிறது. ஒழுக்கம் இல்லாதபோது ஆற்றல் முழுதும் இழக்கப்படுகிறது. செயல்படும் ஆற்றல் இல்லாதபோது பணம் இழக்கப்படுகிறது. பணம் இல்லாததால் சூத்திரர்கள் வீழ்ந்தனர். கல்வியறிவு இல்லாததால் இவ்வளவு கஷ்டங்களும் ஏற்பட்டன.[3]

திருக்குறள்[தொகு]

 • ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்[4]
 • ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்[5]
 • ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து [6]
 • ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி [7]
 • நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்[8]
 • ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல் [9]

பிறர்[தொகு]

 • ஒழுக்கம் என்பது சமயம் செயற்படுதலாகும்; சமயம் என்பது ஒழுக்கத்தின் தத்துவம். - வார்ட்லா[10]
 • சிலர் சமயத்திலிருந்து ஒழுக்கத்தைப் பிரிப்பர். ஆனால், சமயமே வேர். அது இல்லாமல் ஒழுக்கம் வாடி அழிந்து விடும். - ஸி. ஏ. பார்ட்டல்[10]
 • சமயக் கட்சிகள் பலதிறப்பட்டவை. ஏனெனில். அவை மனிதர்களிடமிருந்து தோன்றியவை ஒழுக்க நெறி எங்கும் ஒரே தன்மையுள்ளது. ஏனெனில். அது ஆண்டவனிடமிருந்து வந்தது. - வால்டேர்[10]
 • ஒழுக்கமில்லாமல் சமயமில்லை. சமயமில்லாமல் ஒழுக்கமில்லை. - ஜி. ஸ்பிரிங்[10]
 • தீய கருத்துகள் தீய உணர்ச்சிகளை எழுப்புகின்றன. தூய்மையற்ற பேச்சுகளுக்கு இடமுண்டாக்குகின்றன: தீய செயல்களுக்குக் காரணமாகின்றன. இவை உடலையும் மனத்தையும் நலிவுறச்செய்து, ஒழுக்க நடையில் தூய்மையாயும் மேன்மையாயும் உள்ளவை அனைத்தையும் அழிக்கின்றன. -ஸி ஸிம்மன்ஸ்[10]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
 2. 2.0 2.1 "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
 3. "ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்" புத்தகத்தில் இருந்து. பக்கம் 170
 4. திருக்குறள் 131 (ஒழுக்கம்)
 5. திருக்குறள் 133 (ஒழுக்கமுடைமை)
 6. திருக்குறள் 136 (ஒழுக்கத்தினொல்கார்)
 7. திருக்குறள் 137 (ஒழுக்கத்தினெய்துவர்)
 8. திருக்குறள் 138 (நன்றிக்கு)
 9. திருக்குறள் 139 (ஒழுக்கமுடையவர்க்)
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 141. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் ஒழுக்கம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஒழுக்கம்&oldid=20666" இலிருந்து மீள்விக்கப்பட்டது