உள்ளடக்கத்துக்குச் செல்

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை (2002)

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் (Gabriel José de la Concordia García Márquez - பிறப்பு: மார்ச் 6, 1927 இறப்பு:ஏப்ரல் 17,2014 ) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். 1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'தனிமையின் நூற்றாண்டுகள்' (One Hundred Years of Solitude) நாவலுக்காக வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 • பிடல் ஒரு பண்புள்ள மனிதர், நாங்கள் சந்திக்கும் போது இலக்கியம் பற்றியே விவாதிப்போம்.
 • வானத்தில் ஒரு யானை பறக்கிறது என்று நீங்கள் சொன்னால் மக்கள் உங்களை நம்பமாட்டார்கள். ஆனால், வானத்தில் நானூற்று முப்பத்து ஐந்து யானைகள் பறக்கின்றன என சொன்னால் உங்களை நம்புவார்கள்.[1]
 • இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை.[2]
 • நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய பிரக்ஞை சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை.
 • நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்.
 • சாதாரண மக்களின் தொன்மங்களும் யதார்த்தத்தைச் சேர்ந்தவையே. காவல் துறையினர் மக்களைக் கொல்கிறார்கள் என்பது மட்டுமல்ல யதார்த்தம். சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் யதார்த்தமன்றி வேறென்ன?
 • மது விடுதி ஒன்றில் பியானோக்காரனாக இருந்திருப்பேன். காதலர்கள் இன்னும் அதிகமாக நேசிக்க அந்த வழியில் என் பங்களிப்பு இருந்திருக்கும்.

எழுத்தாளராக ஆகாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் எனக் கேட்ட போது மார்க்கேஸ் கூறியது.

 • எனது பத்திரிக்கை எழுத்துக்கள் இல்லையெனில் எனது நாவல்கள் இல்லை.
 • நான் அடிப்படையில் கருத்தியல் கொண்டவன் என்பதால் இயல்பாக எனது நாவுலுக்குள் அது இருக்கும்; பிரச்சாரத்தைப் படைப்பில் நான் வெறுக்கிறேன்.
 • லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.

சான்றுகள்[தொகு]

 1. Interview with Peter Stone (winter 1981), The Paris Review Interviews: Writers at Work, Sixth Series (1984), p. 324
 2. Interview with Peter Stone (winter 1981), The Paris Review Interviews: Writers at Work, Sixth Series (1984), p. 325

புற இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: