கமல்ஹாசன்

விக்கிமேற்கோள் இலிருந்து

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, இராமநாதபுரம்), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  • சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும்.[4]
  • கல்பனாவின் நகைச்சுவை உணர்வும், எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் தேவை. கல்பனாவுக்கு இரண்டும் இருந்தன.[5]
    • நடிகர் கல்பனா அவர்களின் மரணம் குறித்த செய்தியில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டது.
  • சுதந்திரத்தையும் அராஜகத்தையும் காலம் பிரிக்கிறது. சுதந்திரம் என்பது லஷ்மணன் கோடு போல் வரம்புடன் வர வேண்டும். சுதந்திரம் என்பது மாறாதது, நிலையானது. சுதந்திரம் என்பது நம் உடல் போன்றது, அதனை நாம் ஊட்டிவளர்க்க வேண்டும், காக்க வேண்டும்.[6]
  • உண்மையான கருத்து சுதந்திரம் கொண்டதுதான் உண்மையான ஜனநாயகம்.[7]
  • ‘தேவர் மகன்’ படத்தில் ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தை எழுதியிருப்பேன். அதை சிவாஜி கணேசன் பேசியிருப்பார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். [8]
  • ‘தேவர் மகன்' படத்தில் சிவாஜிக்கு போய் எப்படி வசனம் சொல்லிக் கொடுப் பது என பயந்தது உண்டு. வசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டதே அவரிடம்தான். ஆனால், அவரை விட பணிவான நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. பார்க்க கம்பீரமாக இருந்தாலும், பூனைக் குட்டியாக மாறி விடுவார். வசனம் நன்றாக இருந்தால், ‘‘அதை எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லுப்பா’’ எனக் கேட்பார். அந்த ஊக்கம் ‘தேவர் மகன்' படம் முழுவதும் வியாபித்தது.[8]
    • சிவாஜி கணேசன் பற்றி கமல்
  • ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு.[9]
  • ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால், முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்துவிட்டேன்.[10]
  • நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்த வேண்டாம். என்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.[11]
    • தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் கூறியது.
  • 2020-21 நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2%. பாதுகாப்புக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதி, ஒரு சதவிகிதத்தை சுற்றிதான் கடந்த 10ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கு 8%, பாதுகாப்புக்கு 3.1% நிதி ஒதுக்குகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் அனைத்துமே இந்த முறையில்தான் நிதியை ஒதுக்குகிறார்கள். ஆனால் எனது நாட்டில் இன்னும் பாதுகாப்புத் துறையின்நிதி ஒதுக்கீட்டையே, சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது.[12]
    • கரோனா ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை
  • உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன்பின்தான் பொருளாதாரமும், பாதுகாப்புத் துறையும் இருக்க வேண்டும். உடல்நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத நாடு, நமது ராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறை கூவுவது கொலை குற்றத்துக்கு சமம்.[12]
    • கரோனா ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • ஆரம்பத்தில் புதுமை மிக்க கருத்துக்களோடு, அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளும் படங்களில் நடிப்பதே சிறந்தது என்று கருதினார். பின்னாளில் படம் பார்ப்போரில் அதிகப்படியானவர்கள், உண்மையான அன்பைப் பொழிபவர்கள், பாமர மக்கள் என்பதை உணர்ந்துகொண்டு, அவர்களை மகிழ்விக்க மசாலாப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார்! - கமல்ஹாசனைப் பற்றி சிவகுமார் கூறியது.[13]
  • "நண்பர் கமலஹாசன் உடற்பயிற்சி, நடனபயிற்சி இவ்விரண்டிலும் மிக இளவயதிலேயே அதிகக் கவனம் செலுத்தி அசுரசாதகம் செய்தது, பின்னாளில் திரைப்படங்களில் பல்வேறு பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தப் பெரிதும் உதவியது. - கமல்ஹாசனைப் பற்றி சிவகுமார் கூறியது.[13]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. Kamal Haasan: Can Somebody Guarantee Him A Pension Post Retirement? TimesChennai 3 December 2010
  2. "Celebration of Kamal Haasan’s Half-Century in Indian Cinema". The First Reporter. 4 July 2010. Retrieved on 24 January 2011. 
  3. "Kamal starts shooting bilingual remake of 'A Wednesday'". The Hindu. 10 April 2009. Retrieved on 24 January 2011. 
  4. அனுமதி இல்லாமல் செல்போனில் படம் எடுப்பது அத்துமீறல்; நடிகர் கமல்ஹாசன் பேட்டி (19 ஜுன் 2015). Retrieved on 26 மே 2016.
  5. கல்பனாவின் அசாத்திய ஆற்றலில் கண் கலங்கியதுண்டு: கமல் (28 ஜனவரி 2016). Retrieved on 26 மே 2016.
  6. ஐ.ஏ.என்.எஸ் (1 பிப்ரவரி 2016). எனது முழு சுதந்திரத்தை இன்னும் பார்க்கவில்லை: கமல். Retrieved on 26 மே 2016.
  7. ஆட்சி, அதிகாரங்கள் கருத்து சுதந்திரத்தில் தலையிடக்கூடாது: ஹார்வர்டு பல்கலையில் கமல் பேச்சு (8 பிப்ரவரி 2016). Retrieved on 26 மே 2016.
  8. 8.0 8.1 ஸ்கிரீனன் (19 ஏப்ரல் 2016). சிவாஜிகணேசன் விதைத்த விதைகளில் நானும் ஒருவன்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி. Retrieved on 26 மே 2016.
  9. ஒரே குடும்பமாக விளங்கும் உலகை உருவாக்குவோம்: லூதர் கிங் ஜூனியர் நினைவு விழாவில் கமல் பேச்சு (24 ஏப்ரல் 2016). Retrieved on 26 மே 2016.
  10. அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் (29 ஏப்ரல் 2016). Retrieved on 26 மே 2016.
  11. நட்சத்திரம் என்று அந்நியப்படுத்தாதீர்; தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்: கமல்ஹாசன் (02 மே 2016). Retrieved on 26 மே 2016.
  12. 12.0 12.1 கரோனா வைரஸ் தொற்றை முறியடித்த பின்னர் இந்தியாவை புனரமைப்பது எப்படி? (20 ஏப்ரல் 2020). Retrieved on 20 ஏபரல் 2020.
  13. 13.0 13.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 378. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=கமல்ஹாசன்&oldid=19146" இலிருந்து மீள்விக்கப்பட்டது