கருமுத்து தியாகராசர்
Appearance
கருமுத்து தியாகராசர் குறித்து சிலரின் கருத்துக்கள்
[தொகு]“ | அன்பின் வடிவம் அவர்,ஆருயிர் ஐயா அவர்,இமை போல எமைக்காக்க,
ஈசனடி சேர்ந்தாரோ,உள்ளம் கொதிக்குதே,ஊரும் உறவும் புலம்புதே, எண்ணி மயஙுகுதே,ஏடெழுதி தணிக்குதே,ஐந்தெழுத்து கருமுத்து, ஒருவர் அவரே,ஓதுவோம் அவர் புகழ்,ஔடதமே அவர் நினைவு. நித்தம் நாம் ஏத்திடுவோம். |
” |
-
“ | சந்தனத்தை வென்ற நிறம்,சாந்தத்தைக் கொண்ட முகம், வந்தனத்தை ஏற்கும் ஏற்கும் உரு, வண்டமிழைப் பேசும் வாய்,வெண்ணீற்றின் திருநெற்றி,விளங்கு சிறு பொட்டழகு,கண்ணீற்றீல் கருணை மழை,கணக்கதனில் மாமேதை,சைவத்தை நினையுநெஞ்சு,சால்பிற்கோ துணையிருப்பு,சைவத்தை கல்விக்கும், கண் வைத்த ஆலைக்கும்,நிலை வைத்த உயிராவான்,நித்தம் வளர் மெய்யாவான்,சிலை வைத்து வணங்குகவே,சீராளன் கருமுத்துத் தியாகராசச்செம்மலோன் தன்,திருவடியே சிந்திப்போம், நியமமாய்ப் பூசிப்போம், நித்தம் நாம் ஏத்திடுவோம். உன் கைகள் தொட்டவுடன் இங்கே தொழில்கள் வளாந்தன. | ” |
-
“ | ஆலைகள் பல நிறுவி அற்புதங்கள் செய்திட்டார்,ஆலவாயாம் மாமதுரைத்திருநகரில் அன்று ஒரு நாள் மேலமாசி வீடதனில் தியாகராசர் காந்தியாரை அண்ணலாக்க ஆடையினால் உதவலானார். | ” |
-
“ | வானத்துக்கூந்தலில் செம்மலர் சூடிய வைகறை வானங்களே ஞானத்திருமகன் வாசலில் பொன்னொளிக் கோலங்கள் போடுங்கள். வேனில் நிலாக்களில் மேனி குளித்திடும் தீப இரவுகளே வெள்ளி விளக்குகள் எங்கள் தலைவன் கல்லறைக்கு ஏற்றுங்கள். | ” |
-