காலந்தவறாமை

விக்கிமேற்கோள் இலிருந்து

நேரம் தவறாமை அல்லது காலம் தவறாமை (Punctuality) என்பது ஒரு பணியை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் அல்லது சரியான நேரத்துக்குச் சென்று கடமையை நிறைவேற்றும் ஒரு பண்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • நேரம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும். -மேஸன்[1]
  • தொழிலில் முக்கியமானது நேரம் தவறாமை. அது இல்லாமல் எந்த முறையும் பயனற்றது. -ஸெலில்[1]
  • நான் எனக்குக் குறித்த நேரத்திற்குக் கால் மணி நேரம் முந்தியே சென்றுவிடுவது வழக்கம், அதுதான் என்னை மனிதனாக்கியுல்லது. -நெல்ஸன் பிரபு[1]
  • மூன்று மணி நேரம் முன்கூட்டிச் சென்றாலும் செல்லலாம். ஒரு நிமிடம் பின்தங்கிவிடக்கூடாது. - ஷேக்ஸ்பியர்[1]
  • ஓடிச் செல்வதால் பயனில்லை. முன் கூட்டியே புறப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். - ஃபாண்டெயின்[1]
  • வாஷிங்டனுடைய காரியதரிசி ஒருவர் காலதாமதமாக வந்ததற்கு அவரிடம் காரணம் கூறுகையில், தமது கைக்கடிகாரம் மிகவும் மெதுவாகப் போவதாகத் தெரிவித்தார். அதற்கு வாஷிங்டன், நீர் துக்கடிகாரம் வாங்க வேண்டும் அல்லது நான் புதுக் காரியதரிசியை நியமிக்க வேண்டும். என்று கூறினார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 246. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=காலந்தவறாமை&oldid=21989" இலிருந்து மீள்விக்கப்பட்டது