காலமேலாண்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

காலத்தை வீணாக்காது, அதனை தனக்கோ பிறருக்கோ இருதரப்பினருக்கோ பயன் விளையுமாறும் திட்டமிட்டுச் செலவிடுவதையே கால மேலாண்மை என்கிறோம். இதனைப் பற்றி பலரும் தம்முடைய கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அவற்றுள் சில:

திருவள்ளுவர்[தொகு]

காலத்தாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மானப் பெரிது.

யரலவழள கூறியவை[தொகு]

  • நம்முடைய நேரம் நமக்கு மதிப்பற்ற செல்வம். அதேபோல மற்றவர்களுடைய நேரம் அவர்களுக்கு மதிப்பற்ற செல்வம். எனவே நம்முடைய நேரத்தை நாம் மதிப்பதைப் போலவே மற்றவர்களுடைய நேரத்தையும் நாம் மதிக்கவேண்டும்.
  • விலை மதிப்பற்றது காலம். அதனை இழந்தால் திரும்பப் பெற முடியாது. எனவே உரிய காலத்தில் உரிய செயல்களைச் செய்தல் வேண்டும்.
  • ஒருவர், தன்னுடைய நேரத்தை எச்செயல்களில் வீணாகச் செலவிடுகிறோம் என்பதனை அறிய வேண்டும். பின்னர் அச்செயல்களை கைவிட்டு அதற்காகச் செலவிட்ட நேரத்தை எந்தெந்த பயனுடைய செயல்களில் செலவிட வேண்டும் என முடிவெடுத்துச் செலவிட வேண்டும்.
  • காலத்தின் அருமையை அறியாமல் அதனை நாம் சிறிது சிறிதாகச் செலவிடுகிறோம். அதனைத் தொகுத்துப் பார்த்தால் பேரளவு நேரத்தை நாம் வீணாக்குகிறோம்.
  • படித்தல் போன்ற முக்கியமான பணிகளுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு முக்கியத்துவம் அற்ற செயல்களுக்கு குறைந்த நேரத்தைச் செலவிட வேண்டும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=காலமேலாண்மை&oldid=8893" இலிருந்து மீள்விக்கப்பட்டது