உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்கப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இதில் கிரேக்கப் பழமொழிகள் சேகரிக்கபட்டுள்ளன

 • அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன.
 • இன்று வாழுங்கள், பழமையை மறவுங்கள்.
 • உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான்.
 • எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்ணையே மணந்துகொள்.
 • என் கணவன் என்னை அடிப்பதில்லை, காரணம் அவனுக்கு என்மீது அன்பில்லை.
 • ஓர் ஏழை பணக்காரியை மணந்து கொண்டால், அவள் மனைவியல்லள் -யஜமானி.
 • கடல், தீ, பெண்கள்: மூன்றும் தீமைகள்.
 • காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும்.
 • காதலர் கோபம் காதலுக்குப் புத்துயிர்.
 • கிழவர்கள் இரண்டாவது முறையாகக் குழந்தைகள்.
 • சந்தோஷமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை சுருக்கம், துக்கமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை நீண்டது.
 • தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள்.
 • தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருப்பதைவிட, ஒரேயடியாக மரித்தல் மேலானது.
 • நரிகளை விட அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள்.
 • நான் விவாகம் செய்து கொள்ளவில்லை, என் தந்தையும் விவாகமில்லாது இருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.
 • பகலை இரவில் புகழுங்கள், வாழ்வை முடிவில் புகழுங்கள்.
 • புகழ் பெற்ற மனிதர்க்கு உலகு அனைத்துமே சமாதி.
 • புறாவின் இளமையினும் கழுகின் முதுமை மேலானது.
 • பெண்ணை அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம்.
 • பெரும்பாலான மனிதர் தீயவர்.
 • மரணத்தில் பயங்கரம் ஒன்றுமில்லை, கேவலமான மரணமே அத்தகையது.
 • மரணம் என்பது புனிதமான உறக்கம்.
 • மனிதர் தானாக வரவேற்றுக் கொள்ளும் தீமை திருமணம்.
 • மனிதர் நியாயமற்ற முறையில் மரணத்தை வெறுக்கின்றனர்; அவர்களுடைய பல துயரங்களுக்கும் அதுவே காப்பாயிருக்கின்றது.
 • மனிதனுக்கு உயர்ந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணாலேயே கிடைக்கின்றன.
 • மனிதனுக்கு மனிதன் கடவுள்.
 • முதுமைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை.
 • வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும்.
 • வாழ்க்கை ஒரு மேடை, உங்கள் பாகத்தை , நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
 • வாழ்க்கை தீமையில்லை, தீமையாக வாழ்வதிலேயே தீமை உள்ளது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கிரேக்கப்_பழமொழிகள்&oldid=38034" இலிருந்து மீள்விக்கப்பட்டது