குடும்பம்
Appearance
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- தன் வீட்டில் உள்ள குடும்பத்தினர்களுடன் அன்புடன் வாழ்பவன்தான் அமைதியைப் பற்றிப் பேசிட அருகதை உடையவனாவான். பல விஷயங்களைப் பற்றி, நன்றாக ஆராயும் போதுதான் அறிவு பிறக்கிறது. அந்த அறிவும் அதனால் முழுமை அடைகிறது. அந்த அறிவு நிறைவு பெறுவதால் சிந்தனையும், என்ணங்களும் தூய்மை பெறுகின்றன. எண்ணங்களும், சிந்தனைகளும் பரிசுத்தம் பெறுவதால் இதயம் தூய்மை அடைகின்றது. அந்த இதயத் தூய்மை, மனிதனின் மனதைப் பன்படுத்துகிறது. பக்குவம் அடைகிறது. இதுபோன்ற மனப்பக்குவம் பெற்றவர்கள் வாழும் குடும்பங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றது. இத்தகைய குடும்பங்கள் உள்ள நாடு அமைதியில் நிலைபெற்று விடும். இது போன்ற நாட்டில் உள்ள மக்களனைவரும் தங்களது உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் அன்பு செலுத்தும்போது, அவர்கள் தங்களை விட மேல் நிலையில் வாழ்பவர்களை மதித்துவந்தால் வானகத்தான் குடைகீழ் எங்கும் அமைதி நிலவும். -கான்பூசியசு[1]
- குடும்பங்கள் எப்படியோ அப்படியே சமூகம். - தேயர்[2]
- இன்பமான குடும்பம் முன்கூட்டியே காணும் சுவர்க்கமாகும். -பௌரிங்[2]
- ஸ்திரீதான் குடும்பத்தின் கதிமோட்சம் அல்லது அழிவுக்குக் காரணமாவாள். - ஏமியெல்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 161. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.