குணம்

விக்கிமேற்கோள் இலிருந்து

குணம் என்பது ஒருவரின் வழக்கமான பண்பு ஆகும் இது குறித்த மேற்கோள்கள்.

  • அறிவைத் தனிமையாயிருந்து பெருக்கிக்கொள்ளலாம்: ஆனால், குணம் அலைகள் வீசும் உலகத்தின் சந்தடியிலிருந்துதான் அமைய வேண்டும். - கதே[1]
  • வாழ்க்கையில் நம் குணத்தின் மூலம் பெற்றுள்ளதே கடைசியில் நம்முடன் வரக்கூடியது. -ஹம்போல்ட்[1]
  • மனிதர்கள் சாதாரணச் சிறு விஷயங்களில் தங்கள் குணங்களைக் காட்டிவிடுகின்றனர். அப்பொழுது அவர்கள் எச்சரிக்கையாயிருப்பதில்லை. அற்ப விஷயங்களிலும் மனிதனின் எல்லையற்ற சுயநலத்தைக் காண்கிறோம். அவன் மற்றவர்களின் உணர்ச்சியை மதிப்பதில்லை. தனக்கு எதையும் வேண்டாமென்று ஒதுக்குவதுமில்லை. -ஷோப்பனார்[1]
  • சமுகத்தின் கதி தனி மனிதரின் பண்பில் இருக்கின்றது -சானிங்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 161-162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குணம்&oldid=20989" இலிருந்து மீள்விக்கப்பட்டது