உள்ளடக்கத்துக்குச் செல்

குள்ளச் சித்தன் சரித்திரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

குள்ளச்சித்தன் சரித்திரம் யுவன் சந்திரசேகர் எழுதிய தமிழ்ப் புதினம். இப்புதினம் பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டது. மையமற்ற கதை ஓட்டம் கொண்டது. பல்வேறு தனித்தனிக் கதைகள் வழியாக ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய அமைப்பு உடையது.

மேற்கோள்கள்

[தொகு]
 • இந்த மணல் பரப்பின் ஒவ்வொரு துகளுக்கும் ஒரு பிரத்தியேக சரித்திரம் உண்டு.
 • தெருவில் தேங்கிய சாக்கடைக் குட்டையில் இருந்தும் சரி, இந்த மகா சமுத்திரத்தின் பரப்பிலிருந்தும் சரி, மேகமாகி உயர்ந்து, தாரையாகிப் பொழியும் ஒவ்வொரு துளி நீருக்கும் ஒரு தனி சரித்திரம் இருக்கிறது.
 • மயிலே மயிலேன்னாப் போடாது. ரெண்டு தட்டு தட்டினாத்தான் சரிப்படும்.
மயிலோட இறகு உனக்கெதுக்கு அப்பனே, அது தன்னோடு சம்சாரத்தை மயக்குறத்துக்கு வச்சிருக்கு.
 • உயிருக்குத் தப்பி ஓடுற நாய்கள்லே உசந்த நாய், தாழ்ந்த நாய் வேற.
 • குடை பிடித்துப் பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கலாம். மழையை நிறுத்த முடியுமா!
 • பறவைகள் அரசாள வந்திருந்தால், மனிதர்கள் காட்சிப் பொருட்களாயிருப்பார்கள். மனிதர்களின் சம்போகம் பற்றி மயில்கள் குறிப்பெடுத்திருக்கும்.
 • நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன.
 • நமது ஜனங்களைக் கேட்கவா வேண்டும். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிவிடக் கூடியவர்கள். இவர்கள் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லப் போய்த்தான் இந்த மண்ணில் நாஸ்திகம் தலையெடுக்க ஏதுவாகிவிட்டது.
 • கனவில் நடக்கிற எல்லாமே நிஜம்தான். ஆனால் எதையும் கையாள முடியாது. கைது நீட்டித்து தொட்டுவிடலாம், கையைத்தான் நீட்ட முடியாது.
 • சாரைப்பாம்பின் பாசையில் உயரம் என்ற பதமே கிடையாது. காரணம், அதன் தரிசனத்தில் நீளமும் அகலமும்தான் உண்டு.
 • மனிதர்களுக்குப் பொழுது விடிவதே நிகழ்ந்துவிட்ட துக்கங்களை நினைவுபடுத்தத்தான்.
 • மரணம் அடர்த்தியான,ஊடுருவிப் பார்க்க முடியாத பின் திரையாக இருக்கிறது.
 • தனித்தனிச் சொட்டுகள் ஒன்று கூடித் தாரையாவது போல, பல்லாயிரம் உதிரிச் சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.