கோ. நம்மாழ்வார்
Appearance
கோ. நம்மாழ்வார் (10 மே 1938 - 30 டிசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் .
மேற்கோள்கள்
[தொகு]- உழவுக்கும் உண்டு வரலாறு.
- இனி விதைகளே பேராயுதம்.
- எந்நாடுடையே இயற்கையே போற்றி.
ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள்
[தொகு]- பசி வந்து சாப்பிட வேண்டும்.
- தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்
- சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்
- தூக்கம் வந்து தூங்க வேண்டும்.