சத்திய சாயிபாபா

விக்கிமேற்கோள் இலிருந்து

மேற்கோள்கள்:[தொகு]

மேற்கோள்:01.அன்பு[தொகு]

அன்பால் நாளினைத் தொடங்கிடுக;
அன்பால் நாளும் வாழ்ந்திடுக;
அன்பால் நாளினை நிரப்பிடுக;
அன்பால் நாளினைச் செலவழிக்க;
அன்பால் நாளினை நிறைவு செய்க!
"Start the day with Love;
Live the day with Love;
Fill the day with Love;
Spend the day with Love; and,
End the day with LOVE!"

மேற்கோள்:02.[தொகு]

ஒரே ஒரு சாதிதான் உண்டு, அதுதான் மனிதச்சாதி;
ஒரே ஒரு மதம்தான் உண்டு, அதுதான் அன்பு எனும் மதம்;
ஒரே ஒரு மொழிதான் உண்டு, அதுதான் இதயம் பேசும்மொழி;
ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, அவர் எங்கும் நிறைந்தவர்!
"There is only one caste, the caste of Humanity;
There is only one religiln, the religion of Love;
There is only one language, the language of the Heart;
There is only one God and He is Omnipresent!"

மேற்கோள்:03.[தொகு]

அன்பு `எண்ணம்' ஆகஆனால் அதுதான் உண்மை;
அன்பு `செயல்` ஆகஆனால் அதுதான் அறம்(தருமம்);
அன்பு `உணர்வு` ஆகஆனால் அதுதான் அமைதி;
அன்பு `புரிதல்` ஆகஆனால் அதுதான் அகிம்சை(இன்னாசெய்யாமை).
"Love as Thought is Truth,
Love as Action is Right Conduct,
Love as Feeling is Peace,
Love as Understanding is Non-violence.

மேற்கோள்:04[தொகு]

அன்பு என்பதன் மொத்தஉருவமே நான்; அன்பே என்னுடைய 'கருவி'யாகும்.
"I am the embodiment of Love; Love is my instrument."

மேற்கோள்:05[தொகு]

என்னுடைய மிகப்பெருஞ்சொத்து அன்பு என்பதே! மக்கள் என்னுடைய சக்திகள் பற்றியும்,
நான் செய்யும் அற்புதங்கள் பற்றியும் பேசுகின்றனர்; ஆனால்,என் மிகப்பெரும் அற்புதம்,
- என் அன்புதான்!
"My greatest wealth is Love. People speak about My powers and My miracles, but
My Love is My greatest Miracle."

மேற்கோள்:06[தொகு]

கடவுள்மேல் ஒருவன்கொண்ட அன்பு(பக்தி) என்பது,
நிச்சயம் மனிதனுக்கான அன்பாக மலரவேண்டும்;
அது தொண்டு அல்லது சேவை எனத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
என்வாழ்வே நான்தரும் செய்தி, நான்தரும் செய்தி அன்பு என்பதே!
"Love for God must be manifested as Love for man, and Love for man must express itself
as Service. My Life is My Message and My Message is Love."

மேற்கோள்:07[தொகு]

அன்பு இதயத்தினால்தான் பார்க்கும்,அது கண்களைக்கொண்டு பார்ப்பதில்லை:
அது காதினால் கேட்பதில்லை, சமநிலையுடைய இதயத்தினால் கேட்கும்.
அது நாவினால் பேசாது, ஆனால் கருணையினால் பேசும்.
"Love sees with the heart and not with the eye. It listens, not through the ears,
but by the tranquility of the heart. It speaks, not with the tongue, but out of compassion."


மேற்கோள்: 08.உண்மையான உறவினர்[தொகு]

உண்மையே உன் தாய்!
மெய்யறிவே உன் தந்தை;
தருமமே உன் உடன்பிறந்தான்;
கருணைதான் நண்பனாவான்;
அமைதியே அருமை மனைவி!
பொறுமைதான் உன் மைந்தன்;
இந்த அறுவர்தாம் ஒருவருடைய உண்மையான உறவினர் ஆவார்!


மேற்கோள்: 09 கெட்ட தாய்[தொகு]

இந்த உலகில் கெட்ட மகன்கள் இருக்கலாம்; ஆனால், கெட்ட அன்னைமார்கள் இல்லவே இல்லை!


மேற்கோள்: 10 தாய்[தொகு]

'தாய்' என்ற பாத்திரமாய்ப் பெண்கள் பங்கேற்கும்போது, ஒருபெண்ணின் வலிமை(பலம்) உச்சமாய் வெளிப்படுகின்றது.
தாய் என்பவள், இந்தப் பிரபஞ்சத்தாயின் அடையாளம்! தந்தை என்பவர், தெய்வீகத்தலைவராம் தந்தையின் அடையாளம் ஆவார்.


மேற்கோள்: 11 சொர்க்கமும், நரகமும்[தொகு]

அன்பும், புரிந்துணர்வும் ஆட்சிசெய்தால், அந்த இல்லமே சொர்க்கம் ஆகும்!
ஒருவரை ஒருவர் நம்பாமையும், பகைமையும் இல்லத்தை நரகம் ஆக்கும்!

மேற்கோள்: 12 ஒளிதருவது[தொகு]

இரவில் உலகிற்கு ஒளிகொடுப்பது நிலவு!
பகலில் ஒளிகொடுப்பது ஞாயிறு, சூரியன்!
மூன்று உலகிற்கும் ஒளிதருவது அறமே, தருமமே!
ஒரு குடும்பத்திற்கு ஒளிதருபவன், கலங்கரை விளக்கம் ஒழுக்கம் நிறைந்த மகனே!


மேற்கோள்: 13 இல்லறத்தான்[தொகு]

மேற்கோள்: 14 உணவே அடிப்படை[தொகு]

உணவு எப்படியோ அப்படித்தான் உள்ளம்;
உள்ளம் எப்படியோ அப்படித்தான் எண்ணம்;
எண்ணம் எப்படியோ அப்படித்தான் ஒழுக்கம்;
ஒழுக்கம் எப்படியோ அப்படித்தான் உடல்நலம்!

மேற்கோள்: 15 நல்ல மருந்து[தொகு]

பசிநோய்க்கு மருந்தேதான் உணவாகும்!
தாகம்எனும் நோய்தீரத் தண்ணீர்தான் மருந்தாகும்!
ஆசை எனும் நோயதற்கு மெய்யறிவே மருந்தாகும்!
ஐயம், ஏமாற்றம், அடிக்கடி வரும் தயக்கம்
இம்மூன்று நோய்தீர்க்கும் இணையில்லா மருந்துஎதுவாம்?
அம்மருந்தே 'சேவை' எனும் தொண்டாகும்!
அமைதிதனை அழிக்கின்ற 'அசாந்தி' எனும்ஓர் (அல்சாந்தி=அசாந்தி)
தொற்றுநோய் தீர்க்கின்ற தொல்மருந்து
புகழ்பாடும் 'போற்றிசை'யே! (பஜனை)
இறைவனின் புகழ்பாடும் போற்றிசையே!
இடையறாப் பிறவிநோய்க்கு ஏற்றதொரு திருமருந்து
இறைவன்தான்! கடவுள்தான்! இதயத்தில்
உறைகின்ற இறைவன்தான் நல்மருந்து!

மேற்கோள்: 16[தொகு]

'தன்-நம்பிக்கை' என்பதுதான் அடித்தளம்;
'தன்-நிறைவு' என்பதுதான் சுவர்;
'தன்னல மறுப்பே' கூரை ஆகும்;
'தன்னை உணர்தலே' வாழ்க்கை என்க!

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சத்திய_சாயிபாபா&oldid=15103" இலிருந்து மீள்விக்கப்பட்டது