சாமுவேல் ஜோன்சன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Samuel Johnson by Joshua Reynolds.jpg

சாமுவேல் ஜோன்சன் (1709-1784) ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். ஆங்கிலேயரான இவர் ஒரு விமர்சகரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

 • ஒரு கொசுவானது ஒரு குதிரையைக் கடித்து அதனைச் சிறிது முனகச் செய்யலாம், இருந்தாலும் ஒன்று வெறும் பூச்சிதான், மற்றது எப்போதும் குதிரைதான்.
 • "நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே!,
  நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!!."
 • மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
 • பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் அதிகாரம் அளப்பரியது என்பதனாலோ என்வோ நம் சட்டங்கள் பெண்களுக்குக் குறைவான அதிகாரத்தையே தருகின்றன..[1]
 • மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.[2]
 • செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்று தான் காப்பாற்ற இயலும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 6
 2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=சாமுவேல்_ஜோன்சன்&oldid=16509" இருந்து மீள்விக்கப்பட்டது