உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்மண்ட் பிராய்ட்

விக்கிமேற்கோள் இலிருந்து
கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud - மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர் ஆவார். சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.

மேற்கோள்கள்

[தொகு]
 • மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.
 • முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது.[1]

கனவு

[தொகு]
 • கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை.[2]
 • சின்ன விசயங்களை கண்,காது,மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.[2]
 • கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை.[2]
 • கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு.[2]
 • கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை.[2]
 • கனவில் யானையக் கண்டால் வயிற்று வலி, பூனையைக் கண்டால் இடுப்பு வலி என்று முடிந்த முடிவாக கனவு அகராதி போடுவது சிறுபிள்ளைத் தனமானது.[2]
 • கனவுகள் வேறொரு உலகிலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.[2]
 • கனவுகள் எந்த ஒழுங்குமற்றவை. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதவை அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது. எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன.[2]

சான்றுகள்

[தொகு]
 1. Hothersall, D. 2004. "History of Psychology", 4th ed., Mcgraw-Hill:NY p. 290
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 கனவுகளின் விளக்கம், சிக்மண்ட் பிராய்ட் தமிழில்:நாகூர் ரூமி, பாரதி புத்தகாலயம்

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிக்மண்ட்_பிராய்ட்&oldid=10883" இலிருந்து மீள்விக்கப்பட்டது