சிரீ சிரீ இரவிசங்கர்
Jump to navigation
Jump to search

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (பி. மே 13, 1956) ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- கடமையை மறந்து கவலையென சொல்லித் திரியாதே. அது உன் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.......
- எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, இறைவன் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்
- ஒரு அறிவாளியின் நாக்கு அவனின் இதயத்திற்கு பின்னாலும், ஒரு முட்டாளின் நாக்கு அவனின் இதயத்திற்கு முன்னாலும் உள்ளது
- உன்மையான சந்தோசம் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறது. கடந்த கால சம்பவங்களிலும், நிகழ்கால கேள்விக்குறியிலும் நம்மை தொலைக்காவிட்டால், நிகழ்காலத்தை 100 சதவிகிதம் அனுபவிப்போம்.[1]
சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]