சிறுகதை
Appearance
சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- சிறுகதை என்றால் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். -புதுமைப்பித்தன்[1]
- சிறுகதை, வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது. -புதுமைப்பித்தன்[1]
- ‘சிறு கதை வாழ்க்கையின் சிறிய சாளரம்’ -புதுமைப்பித்தன்[1]
- வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மானித்துக் காண்பித்தது. சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன.-புதுமைப்பித்தன்[1]
தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று தினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற்போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. -புதுமைப்பித்தன்[1]