சீமான்
Appearance
இந்தக் கட்டுரையில் சான்று இல்லை அல்லது தகுந்த சான்று இல்லை. |
`
சீமான் (Seeman, பிறப்பு: 8 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துகிறார். இவர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருகிறார்..
மேற்கோள்கள்
[தொகு]- ஆணுக்குப் பெண் சமம் இல்லை, ஆணும் பெண்ணும் சமம்.
- ஆதித்தமிழர் விடுதலை இல்லாது, மீதித்தமிழர் விடுதலை செல்லாது.
- ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அறியாதவன் வாய்ல மண்ணு.!
- இத எல்லாம் உன் அண்ணன் நான் தான் சொல்லுவேன். எச்சரிச்சிக்கோ.
- இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன்
- இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
- இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
- உங்கள் கண்முன்னே உங்கள் வளங்கள் கொள்ளை போவதை பார்த்துக்கொண்டிருக்க நீங்கள் சபிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
- உடலினை உறுதி செய், அறிவினை விரிவாக்கு, கொள்கை வகுத்து நில், கூடிச் செயல் செய்
- உண்மைய அவதூறுகளால் சாய்த்துவிட முடியாது.!
- உலகத்தில் வீழ்த்தவே முடியாது என்ற ஒன்றில்லை
- உலகிற்கு உன் தகுதியை நீயே அறிவி
- உலகின் மூத்த இனம். ஆனா உள்ளங்கை அளவு அவனுக்குன்னு ஒரு நாடு இல்ல.
- உனக்கு நீ உண்மையாக இரு. உன்னைத் தூற்றுப்வர்களுக்கு நிரூப்பிக்க போராடுவதை விட உன்னை நம்பியவர்களுக்காகப் போராட பழகிள். கொள்.
- உனக்குப் பச்ச மட்ட வைத்தியம் தான்டி
- உனக்கென்னப்பா நீ பைத்தியம் என்ன வேணும்னாலும் பேசலாம்
- உன் தாய்மொழியை நீ பேசவிட்டால் வேறு எந்த நாய் பேசும்.
- உன் முகம் சிதைந்து அழிந்து போனால் உன்னை எப்படி அடையாளம் காண முடியாதோ, அதே போல் உன் மொழி சிதைந்து அழிந்து போனால் உன் இனத்தையும் அடையாளம் காட்ட முடியாது
- உன்னால் உருவாக்க முடியாத ஒன்றை அழிக்க இங்கே எவருக்கும் உரிமையில்லை
- எதுவும் சாத்தியத்திலிருந்து பிறப்பதில்லை, தேவையிலிருந்தே பிறக்கிறது
- எத்தனை ஜி வந்தாலும் கஞ்சி விவசாயி தான் ஊத்தனும்
- எளிய பிள்ளைகள் நாங்கள் ஆட்சிக்காக மட்டுமல்ல! தமிழின மீட்சிக்காக!
- எனக்கு ஓட்டு போட்டு அதிகாரத்தைத் தாருங்கள்!
- எனக்குப் படிக்கல்லாக இல்லாவிட்டாலும் தடைக்கல்லாக இருக்காதே.
- எனது வாக்காளர்கள் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
- என் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
- என் தாயின் மீதும் என் தலைவன்மீதும் சத்தியம்
- என் மொழி தெரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது.
- என் வலி உணராதவன் என் தலைவனாக இருக்க முடியாது.
- என்ன நீ ஒன்னும் பண்ண முடியாது ராசா!
- என்னை எதிர்ப்பவன் எல்லாம் என் எதிரி இல்லை நான் யாரை எதிர்க்கிறொனோ அவன் தான் என் எதிரிர
- என்னைய என்னா சில்லு தேங்கா எடுக்க வந்த சின்னப் பையனு நினைச்சியா மொத்த தேங்காயும் என்னுது
- என்னைய நீ தோக்கடிச்சுக்கிட்டே இரு ஒருநாள் நீ தான் தோத்து போவ.
- என்னைய விட்டா உனக்கு நாதியில்லை உன்னைவிட்டா எனக்கும் வழியில்லை
- ஐயோ இந்தப் பைத்தியக்கார பயல்கிட்ட நம்ம மாட்டிக்கிட்டு
- கனவுத் தேசம் படைக்கக் காத்திருக்கோம்
- ஒவ்வொரு நாளும் அறுவடைக்கான நாளாகப் பார்க்காதே, விதைத்துக்கொண்டே இரு.
- கீழ்கண்டவை உங்கள் உதவியால் தொகுக்கப்பட்டது. மேலும் பரிந்துரைக்கவும். நன்றி.
- கூட்டு பொறியல் எல்லாம் சாப்பாட்டுல தான் சண்டையில எப்போதுமே தனிச்சு தான்
- சரக்கு மற்றும் சேவை வரி, சரக்குக்கு மட்டும் இல்லை வரி
- சாகத் துணிந்து நில் எல்லாமே சாதாரணம்
- சாதி பார்த்துப் போடாத எனக்கு ஓட்டு அது எங்களுக்குத் தீட்டு
- சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியபடுத்துபவனுக்கு பெயர் தாண்டாப் புரட்சியாளன்
- சிறுபான்மைனு எவனாவது சொன்னா, அவனைச் செருப்பாலயே அடி.
- செய் அல்லது சாகடி.
- சென்றவர்கள் போக நின்றவர்கள் களமாடுங்கள்
- தகப்பன் என்பவன் என்னைப் பெற்றவனாக இருக்க வேண்டும்.
- தமிழர்கள் மனிதநேயர்கள் அல்ல உயிர்மநேயர்கள்
- தமிழர்கள் மிகச் சிறந்த உயிர்மை நேயவாதிகள்
- தமிழன் இல்லாத நாடு இல்ல, ஆனா அவனுக்கென்று ஒரு நாடு இல்ல
- தமிழ்நாட்டை தமிழாய்ந்த, தமிழ் மகன் ஆள வேண்டும்
- தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும்
- தனியாவே கத்தி சாவேனே தவிர விட்டுட்டு ஓடிட மாட்டேன்
- தன்னையே மாற்றிக்கொள்ள இயலாதவனால் இந்த உலகத்தை மாற்ற இயலவே இயலாது. மாற்றம் முதலில் உன்னிடமிருந்து தொடங்கட்டும்.
- தாய்மார்களின் மரண ஓலங்களை கேட்டுப் பிறந்தவர்கள்
- நமக்கு எதிரி இருக்க கூடாது, இருந்தா எதிர்க்கக் கூடாது, எதிர்த்தா எதிர்காலமே இருக்க கூடாது
- நாங்கள் இடுப்புவலியில் பிறந்தவர்கள் அல்ல, எம் இனத்தின் வலியில் பிறந்தவர்கள்.
- நாங்கள் உங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல இந்த நாட்டுக்கானவர்கள்
- நாங்கள் கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்தவர்கள் அல்ல அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு மறுகட்டடத்தைக் கட்ட வந்த புரட்சியாளர்கள்
- நாங்கள் சாதாரணமானவர்கள் ஆனால் அசாத்தியமான ஒன்றை செய்யக் கூடியவர்கள்.
- நாங்கள் சாதி பார்த்துப் பழகமாட்டோம், சாதி பார்பவர்களோடு பழகவே மாட்டோம்.
- நாம் தமிழர் கட்சி மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்துயிர்க்களுக்குமானது
- நாம் தமிழர் நாம் தமிழர்னா கட்சி இல்லடா அது நீ பிறந்த இனத்தின் பேரு உன் அடையாளம் அது
- நான் ஏன் ஹிந்தி ஒழிகனு சொல்னும், தமிழ் வாழ்கனு சொல்லிட்டு போறேன்
- நான் செத்தாலும் சரி, என் இனம் வாழ்ந்தாலும் போதும்
- நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி.
- நான் வீழ்ந்தாலும் சரி, என் இனம் எழுந்தால் போதும்
- நிலமற்ற இனமும் நிர்வாண உடலும் உலகில் அவமானகரமானது
- நீ பனங்காட்டு நரினா, நான் வன்னிக்காட்டு புலி.
- நீங்க யாருமே இல்லனாலும் சரி செவத்த பாத்து கூடக் கத்திட்டு இருப்பன் ஆனா விட்டுட்டு போகமாட்டேன்
- நீங்கக் கூலிக்கு வேலை செய்றவங்க, நான் கொள்கைக்கு வேலை செய்றவன்
- நெருப்பை குப்பையைப் போட்டு மூடிவிட முடியாது.
- பிணங்களுக்கு இடையே பிரசவிக்கபட்டர்கள், தாலாட்டு கேட்டு வளர்ந்தவரகளல்ல
- புதியதொரு தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்
- பெண் விடுதலை இல்லாது, மண் விடுதலை இல்லை
- போட்டுப் பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட
- போதிக்கும்போது புரியாது, ஆனால் பாதிக்கும்போது புரியும்
- முடியாதது என்று ஒன்றுமில்லை, உன்னால முடியாதது, எவராலும் முடியாது
- முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.
- மொழி சிதைந்தால் இனம் அழிந்து விடும்
- வந்தவரையெல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை. இனி எம்சொந்தவரையே ஆள வைப்போம். அது எமது இனத்தின் அடிப்படை உரிமை.
- வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு
- விமர்சனத்தை உரமாக்கு அதில் உன் லட்சியத்தை மரமாக்கு
- வெள்ளை என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி
- வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்
- வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் எங்கள் முயற்சி
- முதலில் தனித்து நிற்க பாஜகவுக்குத் துணிவு இருக்கா? சூன் 4 ஆம் தேதிக்கு பிறகு தனித்து பாஜக பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியைக் கலைத்துவிட்டுச் செல்கிறேன்.
- நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, நடுவண் புலனாய்வுச் செயலகம் போன்றவையெல்லாம் ‘தன்னாட்சி அதிகாரம்’ பெற்றவை என நினைத்தோம். இப்போது, அவையெல்லாம் ஆட்சியாளர்களுடைய விரல்களாகிவிட்டன. மோடி விரல் நீட்டினால் நீட்டும் மடக்கினால் மடக்கும்.
- ‘‘மோடியின் விரல்கள்தான் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும்..!’’ - ஆவேசப்பட்ட சீமான்!. விகடன் (12 அக்டோபர் 2023).
- 24 மே 2024 அன்று எழும்பூரிலுள்ள சி. பா ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செய்த பின் அளித்த செய்தியாளர் சந்திப்பில், ``பாஜக-வை விட குறைந்த வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன்!" - சீமான் சவால். விகடன்.
- மானியம், சலுகை, போனஸ், இலவசம் தவிர வேறு திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை. சாதி, மதம், பணம், சாராயம், சாப்பாடு இது தான் இவர்களின் அரசியல் கோட்பாடு. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பது வளர்ச்சி அல்ல, அவர்களுக்கு மாதந்தோறும் வருவாய் பெறக் கூடியவாறு செய்ய வேண்டும்.
- ``மானியம், சலுகை, போனஸ், இலவசம்... இதைத் தவிர இவர்களிடம் வேறு திட்டங்கள் இல்லை!" - சீமான். விகடன் (01 ஏப்ரல் 2024).
- தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெறாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். நாட்டில் பாஜக அதிக தொகையைப் பெற்றிருக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் தமிழகத்தில் திமுக அதிக தொகையைப் பெற்றிருக்கிறது. லாட்டரி விற்பவன், போதைப் பொருள் விற்பவனிடம் பணத்தைப் பெற்று கட்சி நடத்துகிறார்கள். சாராயம் விற்று ஆட்சி நடத்துகிறார்கள்.
- ``மானியம், சலுகை, போனஸ், இலவசம்... இதைத் தவிர இவர்களிடம் வேறு திட்டங்கள் இல்லை!" - சீமான். விகடன் (01 ஏப்ரல் 2024).
- காவிரியில் தண்ணீர் வாங்கி தரமுடியாத இவர்களுக்கு தமிழராகிய நீங்கள் ஏன் ஓட்டுப்போட வேண்டும்.
- மார்ச் 2024 இல் அருப்புக்கோட்டையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், ``காவிரியில் தண்ணீர் வாங்கி தரமுடியாதவர்களுக்கு நீங்கள் ஏன் ஓட்டுப்போட வேண்டும்?"- சீமான் காட்டம். விகடன்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]