சீரடி சாயி பாபா
சீரடி சாயி பாபாவின் பதினோறு சத்தியங்கள்
1. ஷீரடி மண்ணில் யார் தனது காலடியைப் பதிப்பிக்கின்றாரோ அவரது துன்பங்களுக்கு இங்கே முடிவு காணப்படுகிறது
2. இழிந்த, துயரத்தால் பாதிக்கப்பட்டவன் எனது சமாதியின் படிகளில் ஏறிய அடுத்த நொடிப் பொழுதிலேயே, சந்தோஷமும், உற்சாகமும் அடைந்தவனாகி விடுகிறான்.
3. எனது உடல் இம்மண்ணை விட்டு அகன்றாலும், எனது சுறுசுறுப்பும், உறுதியான ஆற்றலும் எப்போதும் போலவே இயங்கிக் கொண்டிருக்கும்
4. எனது சமாதியை வணங்கும் பக்தர்களின் தேவைகள் நீங்கும். அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவர்.
5. நான் சமாதிக்குள்ளிருந்தாலும் எனது பக்தர்களை எப்போதும் உறுதியுடன் காத்து வருவேன்.
6. சமாதிக்குள் இருந்தும் நான் பக்தர்களிடம் பேசுவேன்..அவர்களுக்கு நல்வழியைக் காண்பிப்பேன்.
7. என்னிடம் வந்து சேர்பவர்கள், என்னைச் சரணடைபவர்கள், என்னைத் தஞ்சம் அடைபவர்கள் ஆகியோருக்கு நான் என்றென்றும் உதவியும், வழிகாட்டுதலும் செய்துவருவேன்.
8. நீ என்னைப் பக்திப் பரவசத்துடன் பார்த்தால், நானும் உனக்குக் கருணை காட்டுவேன்
9. உன்னுடைய சுமைகளை நீ என்னை நோக்கி எறிந்தால், அதனைத் தாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
10. நீ என்னிடம் உதவியும், அறிவுரையும் கேட்டு வணங்கினால், நான் அதனை அள்ளி வழங்குவேன்.
11. உனது இல்லத்தில் என்னை வைத்து வணங்கினாலும் உனக்கு வேண்டியதை நான் தருவேன்.