சுயமரியாதை
Jump to navigation
Jump to search
சுய மரியாதை அல்லது தன்மானம் என்பது ஒரு தனிநபரின் தங்களின் சொந்த மதிப்பின் அகநிலை மதிப்பீடு ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- உன்னை நீயே மதித்துக்கொள்ளும் அளவுக்கு நீ வந்துவிட்டால், அதற்குமேல் உனக்கு ஆசிரியர் தேவையில்லை. -ஸெனீகா[1]
- தன்மானமே ஒழுக்கத்திற்கு அடிப்படை -ஸர் ஜே. ஹெர்ஷெல்[1]
- சுயமரியாதையில்லாமல் தன்னையே கைவிட்டுவிடுபவனிடம் வேறு எவன் சேர்ந்திருப்பான்? -ஸர். பி. ஸின்னி[1]
- தன்மானம். தன்னறிவு. தன்னடக்கம் - இம்மூன்றுமே வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை. -டென்னிஸன்[1]
ஈ. வெ. இராமசாமி[தொகு]
- மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான-அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. "மனிதனுக்குப் பிறப்புரிமை சுயமரியாதைதான்." [2]
- விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை.[3]
- சுயமரியாதை இயக்க கொள்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்து எவ்வளவு பிடிவாதக்காரர்களையும் மனம் மாற்றி விடுவார் ஜீவா.[3]
- மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.[3]
- மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.[3]
- மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.[3]
- தெரியாத-புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பயனே இவ்வளவு பொய்களையும் நம்பவேண்டியவனாகிவிட்டான். ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம். மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், “மனிதன்”, “மானுடன்” என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமறியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான். சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும்,எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை. மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.[4]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ குடி அரசு 09-01-1927
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
- ↑ 4.0 4.1 "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு