சுவாமி சகஜானந்தா
Appearance
சுவாமி சகஜானந்தா (Swami Sahajananda) (பி ஜனவரி 27 1890 _ இ மே 1 1959) இவர் ஓரு ஆன்மிகவாதி , சமூக சேவகர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- கள் குடித்தவனுக்குத் தாய் என்றும் மனைவி என்றுமுள்ள வேற்றுமை தோன்றாது. ஆதலால் அறிவைக் கெடுக்கும் கள்ளை அறவே விட்டு விடுங்கள். நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள் மூவகைப்படும். அவற்றுள் தாமச போஜனத்துடன் சேர்க்கப்பட்டுச் சோம்பல், அறியாமை முதலிய தீய ஒழுக்கத்தை உண்டு பண்ணும் மதுபானத்தை விலக்குங்கள்.
- (8-4-1928) (கழனிவாசல் ஆதி திராவிட பாடசாலையின் முதலாண்டு விழாக் கூட்டத்தில்)[1]
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]- பல பெரியோர்களால் பன்முறையும் நந்தனார் கல்லூரி விஷயமாகக் கேள்வியுற்றிருக்கிறேன். பல நாட்களாக இக்கல்லூரியைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் இருந்தும் வந்தது. இப்பொழுது இங்கு வரவேண்டுமென சுவாமி சகஜானந்தர் அன்போடு கேட்டுக் கொண்டமையால் வர நேரிட்டது. நந்தனார் வகுப்பினராகிய இச்சமூகம் முன்னேற்றம் பெற வேண்டுமானால் அறிவோடும், அமைதியோடும் சமாதான வகையில் முயற்சிக்க வேண்டும். ஈண்டு அவ்வாறு நடைபெற்று வருகிறதெனத் தெரிந்து சந்தோஷமடைகிறேன். ஒரு வகுப்பினர் முன்னேற்றத்திற்கு எனைய வகுப்பினர் முயற்சிகள் செய்வதிலும், அந்த வகுப்பில் தோன்றியவர்களே முயற்சித்தால் விரைவில் பெரிதும் பயன்படும் என்பது எனது துணிபு. சுவாமி சகஜானந்தரைப் போல் பலர் தோன்ற வேண்டும். தற்போது இக்கல்லூரி ஓலைக்கட்டிடமாக இருக்கிறது. யான் இங்கு வந்தது மிகவும் ஆச்சரியமெனக் கூறினர். பெரு மாளிகையாயினும், சிறு குடிலாயினும் அன்பிருந்தாலொழியச் சிறப்புறாது. இங்கு அன்பு கமழ்வதால் பெரு மாளிகையினும் சிறப்பாகக் கருதுகிறேன்.
- இராமநாதபுரம் மகாராஜா ராஜா ராஜேஸ்வர சேதுபதி (4-4-1927, சிதம்பரத்தில்)[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.