உள்ளடக்கத்துக்குச் செல்

சுவீடிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்தப் பக்கத்தில் சுவீடிய பழமொழிகள் தொகுக்கபjட்டுள்ளன.

 • இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு.
 • இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள், நடுவயதினர் ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர்.
 • காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும்.
 • காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம்.
 • காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை.
 • சிறு புண்களையும் ஏழை உறவினரையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது.
 • பெண் பிள்ளை இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு.
 • வீட்டில் கடிகாரமே யசமானரா யிருக்கவேண்டும்.
 • வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும்.
 • பெண்தான் இல்லம்.
 • மனிதன் தலை, பெண் தொப்பி.
 • விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மறந்து விடக்கூடாது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சுவீடிய_பழமொழிகள்&oldid=37830" இலிருந்து மீள்விக்கப்பட்டது