உள்ளடக்கத்துக்குச் செல்

சூதாட்டம்

விக்கிமேற்கோள் இலிருந்து

சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சூதாடும் கருவியைக் கையிலெடுத்துக்கொண்ட கணத்திலிருந்தே ஒரு மனிதனை. அவன் தற்கொலை செய்து கொள்பவன் என்றே நான் கருதுகிறேன்; பின்னால் நேருவதெல்லாம் அவன் தன் நெஞ்சிலே குத்திக்கொள்ள உடைவாளைத் தீட்டுவதாகும். - கம்பர்லந்து[1]
  • பகடை உருட்டும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம். நான் குடும்பம் முழுவதற்கும் சாவுமணி அடிக்கும் ஓசையைக் கேட்கிறேன். - ஜெரால்டு[1]
  • சீட்டு, பகடை சரக்குகள் ஆகிய எத்தகைய சூதாட்டமாயினும், ஒன்றுதான். அது பணத்திற்குப்போதிய ஈடு செலுத்தாமல் பணம் பெறுவதாகும். - பீச்சர்[1]
  • சூதாட்டத்தில் மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் அருமையான காலத்தையும், செல்வத்தையும் நாம் இழக்கிறோம். - ஃபெல்ட்ஹாம்[1]
  • சணலை நெருப்பிலிருந்து தொலைவில் வைக்கவும் இளைஞனைச் சூதாட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும். - ஃபிராங்க்லின்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 189-190. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சூதாட்டம்&oldid=21454" இலிருந்து மீள்விக்கப்பட்டது