உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கிஸ் கான்

விக்கிமேற்கோள் இலிருந்து

செங்கிஸ் கான் (அண். 1162–18 ஆகத்து 1227) என்பவர் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த மன்னர் ஆவார். இவர் நடு ஆசியாவின் பழங்குடியினங்களை இணைத்து மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். இவர் முதல் பெரிய கான் அல்லது ககான் என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மக்களே, தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் மிகப் பெரிய பாவங்களைச் செய்துள்ளீர்கள். உங்கள் ஆட்சியாளர்கள் இந்தப் பாவங்களைச் செய்துள்ளார்கள். இந்த வார்த்தைகளுக்கு என்ன ஆதாரம் நான் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் கேட்டால், நான் இதைச் சொல்கிறேன், ஏனெனில், நான் கடவுளின் தண்டனை. நீங்கள் மிகப்பெரிய பாவங்களைச் செய்திருக்காவிட்டால் கடவுள் என்னைப் போன்ற ஒரு தண்டனையை உங்களுக்குக் கொடுத்திருக்கமாட்டார்.
  • ஒரே மனம் மற்றும் நம்பிக்கையுடன் இருங்கள், உங்கள் எதிரிகளை வென்று நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வீர்கள்
    • மிக்கேல் பிராவ்டினின் மங்கோலியப் பேரரசு: வளர்ச்சி மற்றும் மரபு, பக்கம் 224
  • ஏழு ஆண்டு காலத்தில் முழு உலகையும் ஒரே பேரரசில் இணைக்கும் ஒரு பெரும் பணியை முடிப்பதில் நான் வெற்றி கண்டுள்ளேன்
    • கிளைவ் போசின் கொடுங்கோலர்கள்: முழு அதிகாரம் மற்றும் ஊழலின் 2500 ஆண்டுகள், பக்கம் 55
  • ஒருவன் கட்டாயம் குடிக்க வேண்டுமானால், ஒரு மாதத்திற்கு மூன்று முறை குடிக்கலாம், அதைவிட அதிகமானால் அது கெடுதல். ஒருவன் ஒரு மாதத்திற்கு இருமுறை குடித்தால், அது மேலானது; ஒருவன் ஒரு மாதத்திற்கு ஒருமுறை குடித்தால், அது இன்னும் மேலானது; ஒருவன் குடிக்கவே இல்லை என்றால், அதுவே எல்லாவற்றிலும் சிறந்தது.
    • ரசீத்தல்தீனின் ஜமி அல்-தவரிக்
  • கடவுள் எங்கும் இருக்கிறார், அவரை நீ எல்லா இடத்திலும் காணலாம்.
    • முகமது அபீப் மற்றும் கலிக் அகமது நிஜாமியின் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு இந்திய வரலாறு.

செங்கிஸ் கானின் சாங் சனுக்கான மடல்

[தொகு]

ஆங்காரம் மற்றும் வரம்பு மீறிய பகட்டு வாழ்வு வாழ்ந்ததன் காரணமாகத் தெய்வலோகமானது சீனாவைக் கைவிட்டுவிட்டது. ஆனால் நான், வடக்கின் மருநிலத்தில் வாழ்கிறேன். எனக்கென்று மட்டுமீறிய இச்சைகள் கிடையாது. நான் பகட்டை வெறுக்கிறேன். எளிமையைப் பின்பற்றுகிறேன். நான் ஒரே ஒரு மேலங்கியை மட்டுமே வைத்துள்ளேன். ஒரே ஒரு வித உணவைத் தான் உண்கிறேன். என் பகட்டற்ற கோவலர்கள் என்ன ஆகாரம் புசிக்கின்றனரோ, என்ன கந்தல்களை உடுத்துகின்றனரோ அதையே தான் நானும் புசிக்கிறேன், உடுத்துகிறேன். நான் மனுமக்களை என் பிள்ளைகளாகக் கருதுகிறேன். திறன்வாய்ந்தவர்கள் மீது என் சகோதரர்களைப் போல் அக்கறை செலுத்துகிறேன். நாங்கள் எங்கள் கோட்பாடுகளில் எப்போதும் உடன்படுகிறோம். நாங்கள் பரற்பர அன்பால் எப்போதும் ஒன்றுபடுகிறோம். படைத்துறைப் பயிற்சிகளின் போது நான் எப்போதும் முன் நிற்கிறேன். திணிகத்தின் போது நான் என்றுமே பின் நின்றதில்லை. ஏழு ஆண்டு கால இடைவெளியில் முழு உலகையும் ஒரே பேரரசில் இணைக்கும் ஒரு பெரும் பணியை முடிப்பதில் நான் வெற்றி கண்டுள்ளேன். புகழப்படுமளவுக்கு எனக்கென்று சிறப்புகள் எதுவும் கிடையாது.

ஆனால் சின் அரசாங்கமானது நிலையற்றதாக உள்ளது. எனவே தெய்வலோகமானது அரியணையைப் பெறுவதற்கு எனக்கு உதவி செய்தது. தெற்கில் சாங், வடக்கில் குயி கோ, கிழக்கில் சியா மற்றும் மேற்கில் உள்ள காட்டுமிராண்டிகள் ஆகிய அனைவரும் என்னுடைய முதன்மை நிலையை ஒப்புக்கொண்டுள்ளனர். எங்களது சன்யுவின் பண்டைய காலத்திலிருந்து இதைப் போன்ற ஒரு பரந்த பேரரசை யாரும் கண்டதில்லை என எனக்குத் தெரிகிறது. ஆனால் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதைப்போல், என் கடமைகளும் அதிகமாக உள்ளன; என் ஆட்சியில் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றனர் என்ற அச்சம் எனக்கு உள்ளது. ஆற்றைக் கடக்க நாம் படகுகளையும் சுக்கான்களையும் உருவாக்குகிறோம். அதைப்போல, பேரரசை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கான உதவியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் ஞானிகளை அழைக்கிறோம். நான் அரியணைக்கு வந்ததிலிருந்து என் மக்களை ஆள்வதை நான் என் மனதிற்கு நெருக்கமான செயலாக வைத்துள்ளேன்; ஆனால் 3 குங் மற்றும் 9 மன்னர்களின் இடங்களை நிரப்பத் தகுந்த நபர்களை என்னால் கண்டறிய முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் நான் விசாரித்தபோது, நான் கேட்டது யாதெனில், ஞானி நீங்கள் உண்மையைக் கண்டறிந்ததாகவும் நன்னெறிமுறைகளுடன் வாழ்வதாகவும் அறிந்தேன். கற்றவரும் அனுபவமுடையவருமாகிய நீங்கள், விதிகளைப் பற்றி பெரிதும் அறிந்துள்ளீர்கள். உங்களது புனிதத் தன்மை அனைவரும் அறிந்ததாகும். பண்டைய ஞானிகளின் கடுமையான விதிகளின் பலன்களை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள். புகழ் பெற்ற நபர்களின் சிறப்பான திறமைகளை உங்கள் கலையானது கொண்டுள்ளது. பல காலமாக நீங்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகி மலைக் குகைகளில் வாழ்ந்து வருகிறீர்கள்; உங்களது புனிதத் தன்மையானது, இறப்பற்றவர்களின் பாதையிலுள்ள முகில்களைப் போல எண்ணிலடங்காமல் உள்ளது. போருக்குப் பிறகும் நீங்கள் ஷான் டுங் பகுதியிலேயே தொடர்ந்து அதே இடத்தில் வசித்து வருவதை நான் அறிவேன். நான் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒரே வண்டியில் நீங்கள் வெயி ஆற்றிலிருந்து திரும்பியது மற்றும் உங்கள் நாணல் குடிசையில் நீங்கள் 3 முறை பெற்ற அழைப்பிதழ்கள் ஆகிய கதைகளை நான் அறிவேன். ஆனால் நான் என்ன செய்வது? நாம் மலைகளாலும் சமவெளிகளாலும் நீண்ட தொலைவிற்குப் பிரிக்கப்பட்டுள்ளோம். என்னால் உங்களைச் சந்திக்க இயலவில்லை. அரியணையிலிருந்து இறங்கிப் பக்கவாட்டில் நிற்கத்தான் என்னால் முடியும். நான் உண்ணாநோன்பிருந்து குளித்துள்ளேன். உங்களுக்கு வழிக்காப்பாளர்களையும் வண்டியையும் தயார் செய்யுமாறு என் படைத்துறை உதவி அலுவலன் லியூ சுங் லூவிற்கு ஆணையிட்டுள்ளேன். ஆயிரம் லி தொலைவைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்களது புனிதமான பாதங்களை நகர்த்துமாறு உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மணல் நிறைந்த பாலைவனத்தின் விரிவைப் பற்றி எண்ணாதீர்கள். தற்போதைய நிகழ்வுகளின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் மீது பரிவு கொள்ளுங்கள், அல்லது என் மீது இரக்கம் காட்டுங்கள். ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகளை எனக்குக் கூறுங்கள். நானே உங்களுக்குப் பணி செய்வேன். உங்களது மெய்யறிவில் குறைந்தது ஒரு சொற்பத்தையாவது எனக்குக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு ஒரே ஒரு வார்த்தையாவது கூறுங்கள், நான் மகிழ்ச்சியடைவேன். இம்மடலில் என் எண்ணங்களை நான் சுருக்கமாகத் தெரிவித்துள்ளேன், என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். மேலும், மகா தாவோவின் நெறிமுறைகளை அறிந்த நீங்கள், நல்லவற்றின் மீது இரக்கம் காட்டுவீர்கள் என்றும் மக்களின் எண்ணங்களை ஒதுக்கமாட்டீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.

செங்கிஸ் கானின் எண்ணங்கள்

[தொகு]
  • பாவங்களிலேயே மிகக் கேடானது ஒருவன் தன் தாய் தந்தையரை மோசமாக நடத்துவது.
    • லீ சிச்சாங்கின் சியு சாங் சனின் மேற்கு நோக்கிய பயணங்கள், மொழிபெயர்ப்பு ஆர்தர் வாலேய், பக்கம் 115.

செங்கிஸ் கானின் உரையாடல்கள்

[தொகு]

இமாமுடன்

[தொகு]

செங்கிஸ் கான்: கொள்ளைக் காரன் சுல்தானை பழிவாங்கியதற்காக ஒரு பராக்கிரமமான பெயர் இந்த அகிலத்தில் எனக்குப் பின் நிலைத்திருக்கும். அவன் மன்னன் கிடையாது. அவன் கொள்ளைக் காரன். மன்னர்கள் தூதுவர்களைக் கொல்லக் கூடாது. அவன் ஒரு மன்னனாக இருந்திருந்தால் ஒற்றாருக்கு வந்த என் தூதுவர்களைக் கொன்றிருக்கக் கூடாது. எனக்கு ஒரு பராக்கிரமமான பெயர் நிலைத்திருக்குமல்லவா?
இமாம்: என் உயிருக்குக் கான் வாக்குறுதியளித்தால், நான் என் கருத்தைக் கூறுவேன்.
செங்கிஸ் கான்: உங்கள் பாதுகாப்புக்கு உறுதி கொடுக்கப்படுகிறது.
இமாம்: மனிதர்கள் இருக்கும் போது ஒரு பெயர் நிலைத்திருக்கும். கானின் கிங்கரர்கள் அனைவரையும் கொல்லும்போது இக்கதைகளைக் கூற யார் எஞ்சியிருப்பார்?
செங்கிஸ் கான்: நான் உங்களை மதிநுட்பமுடையவர் எனக் கருதினேன். ஆனால் உங்களுடைய இவ்வுரையிலிருந்து உங்களுக்கு முழுமையான புரிதல் இல்லையெனத் தெரிகிறது. இவ்வுலகில் ஏராளமான மன்னர்கள் உள்ளனர். கொள்ளைக் காரன் சுல்தானின் குதிரைக் குளம்புகள் அடையும் இடங்களுக்கு எல்லாம் நான் பேரழிவை எடுத்துச் செல்வேன், அழிவுக்குக் காரணமாவேன். உலகின் மற்ற பகுதிகளில் உள்ள எஞ்சிய மனிதர்கள், மற்ற இராச்சியங்களின் மன்னர்கள் என் கதையைப் புரிந்து கொள்வார்கள்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=செங்கிஸ்_கான்&oldid=38105" இலிருந்து மீள்விக்கப்பட்டது