உள்ளடக்கத்துக்குச் செல்

சைவ சமயம்

விக்கிமேற்கோள் இலிருந்து
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனை ரிசிகேசில் வழிபடுகின்றனர்.
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனை ரிசிகேசில் வழிபடுகின்றனர்.

சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சிவம் என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி சைவம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ சமயம் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். தற்காலத்தில் சைவ சமயமானது இந்து சமயத்தின் ஒரு பிரிவாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
 • “The Saiva Siddhanta Philosophy of South India is onc of the classical products of the Tamil Mind.” “Saiva Siddhanta is predominantly a Tamil Philosophy." —John H. Piet, A Logical Presentaton of the Saiva Siddhanta Philosophy.
  • தென்னிந்தியாவிற்குரிய சைவ சித்தாந்தம் தமிழர் அறிவுத் திறனால் விளைந்ததாகும்; சைவ சித்தாந்தம் தமிழர் தத்துவமேயாகும். —சான் எச். பியட்[1]
 • “The worship of civa is one of the oldest and most widely spread in India.” —Pai Monograph on the Religious Sects in India among the Hindus.
  • சைவ வழிபாடு இந்தியா முழுவதும் பரவியுள்ள தொன்மை வாய்ந்த ஒன்றாகும். —பாய்[1]
 • “The Saiva Siddhanta System is the most elaborate, influential and undoubtedly the most intrinsically valuable of all the religions of India. It is peculiariv the South Indian and Tamil religion...............“ —Dr. G. U. Pope
  • சைவ சித்தாந்தமே இந்தியாவிலுள்ள பல்வேறு வகையான சமயங்களுக்குள் மிகவும் விளக்கமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஆத்துமீக மதிப்புடையதாகவும் இருக்கின்றது. அது தமிழர்களுக்கேயுரிய தனித்த ஒரு சமயக் கோட்பாடாகும். ஜி. யு. போப்[1]
 • “There is no school of thought and no system of faith or worship that comes to us with anything like the claims of Saiva Siddhanta.
  “The System possesses the merits of great antiquity. in thc religious world, the Saiva System is the heir to all that is most ancient in South India; it is the religion of the Tamil people by the side of which every other form is of comparatively forcign origin.
  "In the largeness of its following, as well as in regard to the antiquity of some of its elements, the Saiva Siddhanta is, beyond any other form, the religion of the Tamil, people, and ought to be studied by all Tamil missionaries.
  “The Saiva Siddhanta represents the high water mark of Indian thought and Indian life.” —Rev. W. Goudle, C. C. Magazine.
  • சைவ சித்தாந்தம் சிறந்த தத்துவக் கருத்துக்களைக் கொண்டிலங்குகின்றது; வேறு எந்தச் சமயத்திலும் அவ்வாறில்லை. சைவ சமயம் மிக்க தொன்மை வாய்ந்தது; சிறப்பு வாய்ந்தது. சைவ சித்தாந்தம் தமிழர்க்கே உரியது; தனித்து இயங்கும் தன்மையது; அனைவராலும் கற்றற்குரியது. இந்திய மக்களின் சிறந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை நெறிக்கும் ஓர் எடுத்துக்காட்டாக, கலங்கரை விளக்கமாக இலங்குகின்றது. —டபிள்யூ. கௌடி[1]
 • “Saivaism and Vaishnavism constitute the very life and soul of modern Hinduism.” —Prof. Monder Williams
  • தற்கால இந்து சமயத்தின் இரு கண்களாகச் சைவமும் வைணவமும் விளங்குகின்றன: உயிர்நாடியெனினும் அது மிகையாகாது. —பேராசிரியர் மானியர் வில்லியம்சு[1]
 • “A System which perhaps from the theistic point of view is the most valuable of all that have sprung up upon the Indian soil.” —Rev. N. Macnicol, Indian Theism.
  • இந்தியச் சமயங்களில் சைவ சமயம் ஒன்றே கடவுட் தத்துவத்தைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறுகிறது. எனவே இது மிகச் சிறந்த சமயமாகக் கருதப்படுகின்றது. —என். மாக்னிக்கால்[1]
 • “No cult in the world has produced a richer devotional literature or one more instinct with brilliance of imagination, fervour of feeling and grace of expression.” —Dr. L. D. Barnett, Heart of India.
  • சைவ சமயத்தைப் போன்று உலகில் வேறு எந்தச் சமயமும் கற்பனைத் திறனும், கவிதையழகும், உணர்ச்சிப் பெருக்கும் உடைய சிறந்த இலக்கியங்களைப் படைக்கவில்லை. —டாக்டர் எல். டி. பார்னெட்[1]
 • "Sailvism is the nost ancient faith in the world.” —Sir John Marshall
  • சைவக்கொள்கை மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். —சர் சான் மார்சல்[1]
 • “Saiva Siddhanta may be ranked among the perfect and clcvcrest system of human thought.” —Dr. Kamil zvilabil
  • சைவ சித்தாந்தம் முழுமையுடையதாகும்; மனித சிந்தனைத் திறனுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். —டாக்டர் கமில் சோவிலபில்[1]
 • "Saivam is a humanitarian religion-universal and ever linting." —R. G. Nallakutralam
  • சைவம் என்றும் எங்கும் நிலவும் அன்புச் சமயமாகும். —ஆர். ஜி. நல்லகுற்றாலம்[1]

குறிப்புகள்

[தொகு]
 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 பேரா. அ. திருமலைமுத்துசாமி. Saiva Nanneri. நூல் 1-4. மீனாட்சி புத்தக நிலையம். Retrieved on 27 திசம்பர் 2021.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சைவ_சமயம்&oldid=36981" இலிருந்து மீள்விக்கப்பட்டது