ஜார்ஜ் சண்டயானா

விக்கிமேற்கோள் இலிருந்து
ஜார்ஜ் சண்டயானா.

ஜார்ஜ் சண்டயானா (1863 - 1952) என்பவர் ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், கட்டுரையாளர், கவிஞர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மைவாய்ந்த எழுத்தாளராவார். பல மொழிகளைக் கற்ற இவரின் “தி சென்ஸ் ஆப் பியூட்டி” உள்ளிட்ட இவரது மெய்யியல் படைப்புகள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் பெரும்புகழ் பெற்றவை.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று குடும்பம்.[1]
  • மரணத்தால் மட்டுமே போரின் முடிவைப் பார்க்க முடியும்.[1]
  • ஒரு மனிதனின் கால்கள் அவனது சொந்த நாட்டில் பதியப்பட வேண்டும். ஆனால், அவனது கண்கள் உலகையே நோட்டமிட வேண்டும்.[1]
  • உங்களுடைய உணர்வுபூர்வமான வாழ்க்கையை மற்றவர்களின் பலவீனங்களின் மீது ஒருபோதும் உருவாக்காதீர்கள்.[1]
  • மிகப்பெரும் ஏமாற்றங்களில் இருந்தே ஞானம் பிறக்கின்றது.[1]
  • விரைவில் கடந்த காலமாக மாறிவிடும் என்பதை நினைவுகூர்ந்து எதிர்காலத்தை வரவேற்க வேண்டும்.[1]
  • விவேகமுள்ள மனம் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் உள்ளது.[1]
  • கடினமானது என்பது உடனடியாக செய்ய முடிந்தது; சாத்தியமற்றது என்பது செய்வதற்கு சிறிது நேரம் தேவைப்படுவது.[1]
  • வாழ்க்கை என்பது ஒரு விந்தையோ அல்லது விருந்தோ அல்ல; அது ஒரு இக்கட்டான நிலையை உடையது.[1]
  • பள்ளியில் மட்டுமே படித்த ஒரு குழந்தை, உண்மையில் படிக்காத குழந்தையே.[1]
  • எது சாத்தியம் என்பதன் அறிவே மகிழ்ச்சியின் ஆரம்பம்.[1]
  • உடல் ஒரு கருவி, மனம் அதன் செயல்பாடு. [1]
  • அழுதறியாத இளைஞன் ஒரு காட்டுமிராண்டி; சிரித்தறியாத கிழவன் ஒரு மூடன்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 [1] ஜார்ஜ் சண்டயானா தி இந்து 2016 ஆகத்து 1
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_சண்டயானா&oldid=20817" இலிருந்து மீள்விக்கப்பட்டது