உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் நார்டன்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜார்ஜ் நார்டன் (George Norton 1828 1839) என்பவர் மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.

இவரது மேற்கோள்[தொகு]

  • காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் தம்முடைய திரண்ட பொருள்களைக் கோயில்களுக்கும் பிற தருமங்களுக்குமாகச் செலவழித்தார். அவருக்குச் சந்ததியாவது, வேறு உரிமையாளர்களாவது இல்லாமற் போனபடியால், அவருடைய வம்ச ஆசாரப்படி தம்பொருள்களையெல்லாம் சத்திரம் சாவடிகள் கட்டுவதற்காகவும், வறியோர்கட்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதற்காகவும் வைத்துவிட்டுக் காலமானர். அவருடைய எண்ணத்திற்கும், இந்து ஜன சமூகத்தாருடைய வழக்கதிதிற்கும் பொருந்தினது போல் சுப்ரீம் கோர்ட்டாரவர்களுடைய தீர்மானத்தின்படி இந்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்காக நான்கு லட்ச ரூபாய் வரையிலும் தரப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையைச் சிதைந்து போக வொட்டாமலும் களவாட வொட்டாமலும் இந்த விஷயத்துக்காக காப்பாற்றுகிற நிமித்தம் நான் எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன். மேற்படி முதலியார் பெயரால் தருமக்கல்விச் சாலைகள் ஏற்படுத்துவதில் எவ்வளவு என்னுடைய ஒய்வு நேரங்களைச் செலுத்தி வந்தேன். அது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இவ்வாறு நான் செய்ததைப் பற்றிச் சிலர் பழிச்சொல் கூறும்படி இருந்த போதிலும், அது வெளிக்கு வருமாயின், எனக்கு அதனல் மேன்மையும், திருப்தியும் உண்டாகும். — (2-10-1846)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_நார்டன்&oldid=17600" இலிருந்து மீள்விக்கப்பட்டது