ஜெமினி கணேசன்
Jump to navigation
Jump to search
ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார்.
மேற்கோள்கள்[தொகு]
- தொழில்களிலே ஒன்று ஒஸ்தி. மற்றாென்று மட்டம் என்று நான் என்றும் நினைத்ததில்லை. மேல் நாட்டினர்போல் தொழில் என்றால் எல்லாமே கெளரவமான தொழில்தான் என்றுதான் நினைத்தேன். சிகை அலங்காரத் தொழில், சலவைத் தொழில், ரோடு பெருக்குகல், கூலி வேலைசெய்தல், ரிக்ஷா இழுத்தல், இப்படி எத்தனையோ தொழில்களிருக்கின்றன. திருட்டுத் தொழில்கூட இருக்கிறது. ஆனால் நம் நாட்டிலே படித்தவன் இவற்றையெல்லாம் துணிந்து செய்ய முடியுமா? முடியாதே! ஆனால், சினிமாவில் நடிகனாக ஆனால், இத்தனை தொழில்களையும் செய்பவனாக நடிப்பிலாவது ஆகலாம் அல்லவா? — (1971)[1]
நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]
- "பந்தா இல்லாத தன்மையும், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் குணமும், இத்தனை திறமைசாலிகளின் படங்களில் நடிக்க அவருக்குத் துணை நின்றன." - ஜெமினி கணேசனைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 261.