ஜெய்சங்கர்
Jump to navigation
Jump to search
ஜெய்சங்கர் (1938 - ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் சங்கர் என்ற இயற்பெயர் காெண்டவர்.இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- வியாபாரிகள், தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும் போது, கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. ஆனால் அதே நேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். (8.1-1975)[1]
நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]
- 'ஜெய்' என்றால் 'கலகலப்பு' என்று அர்த்தம் கொள்ளலாம். துறுதுறு என்றிருப்பார்.யார் தோள் மீதும் கை போட்டுப் பழகுவார்.- ஜெய்சங்கரைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]
- அசல் வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது போலவே,நடிப்புத் தொழிலையும் ஜாலியாக அவர் கருதினார். கண்ணீர் சிந்துவது, கனல் தெறிக்க வசனம் பேசுவது என்று ஏதாவது காட்சிகள் இருந்தால், டைரக்டரை அழைத்து "சார்! இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் நம்ம சிவா இருக்கான்! அவனை யூஸ் பண்ணிக்குங்க..! நம்ம ஏரியாவே தனி" என்று விட்டுக் கொடுத்து விடுவார். - ஜெய்சங்கரைப் பற்றி சிவகுமார் கூறியது. [2]
சான்றுகள்[தொகு]
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 2.0 2.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 459-463.