டென்சின் கியாட்சோ

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
டென்சின் கியாட்சோ

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ (திபெத்திய மொழி: Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso/ བསྟན་འཛིན་རྒྱ་མཚོ་, பிறப்பு லாமோ தொங்ருப் (Lhamo Döndrub/ལྷ་མོ་དོན་འགྲུབ, ஜூலை 6, 1935) திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • திபெத் முழுவதையும் அமைதி மண்டலமாக அறிவிக்க வேண்டும்.[1]
  • நேர்மறையான நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு, நேர்மறையான பார்வையை உருவாக்க வேண்டும்.
  • எப்போதெல்லாம் சாத்தியமாகிறதோ அப்போதெல்லாம் அன்பாக இருங்கள். இது எப்போதும் சாத்தியமாகும்.
  • சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுப்பதில் நடைமுறையில், ஒருவருடைய எதிரியே சிறந்த ஆசிரியராக இருக்கின்றார்.
  • நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால், நல்லது. ஆனால், அது இல்லாமலும் உங்களால் வாழமுடியும்.
  • கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரணமான விஷயம்.
  • மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழமுடியும்; ஆனால், மனித நேசம் இல்லாமல் நம்மால் வாழமுடியாது.
  • நாம் நம்மிடம் அமைதியை ஏற்படுத்தாதவரை, நம்மால் வெளி உலகில் ஒருபோதும் அமைதியைப் பெறமுடியாது.
  • தூக்கம் என்பது மிகச்சிறந்த தியானம் ஆகும்.
  • மகிழ்ச்சி என்பது ஏற்கெனவே தயாராக இருக்கும் விஷயமல்ல; அது உங்கள் சொந்த நடவடிக்கைகளில் இருந்து வருவது.
  • அறியாமை நமக்கு ஆசானாக இருக்கும் இடத்தில், உண்மையான அமைதிக்கான சாத்தியம் இல்லை.
  • இந்த வாழ்க்கையில் நமது முதன்மையான நோக்கம், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே. உங்களால் உதவ முடியவில்லை என்றால், குறைந்தது புண்படுத்தாமலாவது இருங்கள்.
  • கோயில்களுக்கு அவசியமில்லை, சிக்கலான தத்துவம் தேவையில்லை; நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நமது கோயில், கருணையே தத்துவம். இதுவே எனது எளிய மதம்.
  • நமது வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே.
  • அன்பு மற்றும் கருணை ஆகியவை ஆடம்பரமானவை அல்ல, அவசியமானவை. இவையில்லாமல் மனிதநேயம் தொடர்ந்து வாழமுடியாது.[2]


சான்றுகள்[தொகு]

  1. 1987, செப்டெம்பர் 21 அன்று வாசிங்டன் நகரின் கெபிடல் ஹில்லியில் நடந்த மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட போது கூறியது.
  2. தி இந்து 2016 சூன் 27

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=டென்சின்_கியாட்சோ&oldid=14372" இருந்து மீள்விக்கப்பட்டது