உள்ளடக்கத்துக்குச் செல்

தீபச்செல்வன்

விக்கிமேற்கோள் இலிருந்து

தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். ஈழத்தின் நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுபவர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் நேர்காணல்களின் ஊடாகவும் ஈழத்து மக்களின் அரசியலை ஈழப்போராட்டத்தை வலிமையான தனது குரலில் பதிவு செய்திருக்கின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மக்களின் தோல்விகள்தான் போராட்டங்களை உருவாக்குகின்றன.
  • கல்லறைகளைத் தடயங்களை அழித்தாலும் எமது மக்களின் நினைவுகளை அழித்துவிட முடியாது.
  • வடக்கு கிழக்கிலிருந்து நிலங்களைச் சுருட்டவும், தமிழர்களின் உரிமையைப் பறிக்கவும் அரசு நிகழ்ச்சி நிரல்களை வடிவமைத்திருக்கையில் எமது மக்கள் மீண்டும் போராட வேண்டிய நிலமைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தீபச்செல்வன்&oldid=9761" இலிருந்து மீள்விக்கப்பட்டது