நாகேஷ்
Jump to navigation
Jump to search
நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 – ஜனவரி 31, 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
மேற்கோள்கள்[தொகு]
என்னிடம் இப்போது ஏறத்தாழ 60,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது போன்ற ஒரு லைப்ரரி, வேறு யாரிடமும் (நட்சத்திரங்களுக்குள்) நிச்சயமாக இல்லை. எனக்கு அடுத்தபடியாக நடிகர் நாகேஸ்வரராவிடம் பெரிய புத்தகசாலை ஒன்று இருக்கிறது. எனது லைப்ரரியிலிருந்து அநேகர் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிப் போவதுண்டு. ஆனால் யாருக்குப் புத்தகம் இரவல் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக்கூடாதென்பது எனக்கு நன்றாகத் தெரியும். (9-5-1973)[1]
நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]
- குண்டும் குழியுமாக, இண்டும் இடுகுமாக உள்ள மிகச் சாதாரண முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய ஹீரோக்கள் செய்தற்கரிய சாதனைகளைச் செய்துக்காட்டியவர் அன்பிற்குரிய நாகோஷ். - நாகேஷ் பற்றி சிவகுமார் கூறியது. [2]
- படத்தில் அறிமுகக் காட்சியிலேயே ஏதாவது குறும்பு செய்து, கைதட்டல் வாங்கிவிடுவார். வெளியூர் படப்படிப்புகளுக்குப் போனால், வேடிக்கை பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை, இயற்கையாக தான் அடிக்கும் ஜோக்குகள் மூலம் கவர்ந்து தன் பக்கம் இழுத்துக் கொள்வார். - நாகேஷ் பற்றி சிவகுமார் கூறியது.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 2.0 2.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 298-300.