நா. முத்துக்குமார்

விக்கிமேற்கோள் இலிருந்து

நா. முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016) தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. அண்மையில் தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  • கவிதைங்கறது ஒத்தையடிப்பாதை மாதிரி. பாதையையும், இலக்கையும் நம்ம விருப்பப்படி அமைச்சிக்கலாம். ஆனா, சினிமா பாடல்... தண்டவாளத்து மேல பயணிக்கிற மாதிரி. தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தடம் புராளம பயணிக்கனும்.
    • கவிஞருக்கு பாடலாசிரியருக்குமான வித்தியாசத்தைப் பற்றி கேட்ட பொழுது கூறியது.[1]
  • "குடுசை வீடு தான், ஆனால் வீடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தங்கங்கள் இருக்கும், அப்பா எந்நேரமும் வாசித்து கொண்டே இருப்பார். அவரை நான் தூங்கி பார்த்ததே இல்லை. இதை தவிர தமிழகத்தில் வரும் அனைத்து சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் என அனைத்தையும் வாங்குவார். சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு, என்னையும் சைக்கிளில் அழைத்து செல்லுவார்" தனது சிறு வயது வாழ்கைப் பற்றி ஒரு மேடையில் நா. முத்துக்குமார் குறிப்பிட்டது.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • " கடந்த 10 வருடங்களில் அதிக தமிழ்ப் பாடல்கள் எழுதியவர் நா.முத்துக்குமார். அவற்றில் பெரும்பாலானவை ஹிட் பாடல்கள். கடந்த சில மாதங்களாகக் கூட அவர் நிறைய பாடல்கள் எழுதிவந்தார். " - நா. முத்துக்குமாரைப் பற்றி மதன் கார்க்கி கூறியவை.[3]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. தண்டவாள பயணி நான்.. தினமலர் (15 ஜீன் 2012). Retrieved on 16 ஆகத்து 2016.
  2. Venkatesan (14 ஆகத்து 2016). பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார். தினமணி. Retrieved on 16 ஆகத்து 2016.
  3. DN (16 ஆகத்து 2016). என்னுடைய குடும்பத்துக்கு ராயல்டி வழங்கப்படவேண்டும்: நா. முத்துக்குமார் விருப்பம்!. தினமணி. Retrieved on 16 ஆகத்து 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நா._முத்துக்குமார்&oldid=37866" இலிருந்து மீள்விக்கப்பட்டது