உள்ளடக்கத்துக்குச் செல்

நினைவுச் சின்னம்

விக்கிமேற்கோள் இலிருந்து

நினைவுச் சின்னம் (Monument) என்பது, குறிப்பிடத்தக்க மனிதர்கள், நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்வதற்கான அமைப்புகளாகும். இது, ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளைக் குறிக்கும் அமைப்பாகவும் இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு தலைமுறைக்கும் பின் தலைமுறைக்கும் தொடர்பு ஏற்படுத்தும் சங்கிலிகள் நினைவுச் சின்னங்கள். -ஜோபெர்ட்[1]
  • நினைவுச் சின்னம் அவசியமாயுள்ள ஒருவருக்கு அதை வைக்க வேண்டியதில்லை. - ஹாதார்ன்[1]
  • எவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் தேவையில்லையோ அவர்களே அவைகளுக்கு உரியவர்கள். அவர்கள் மக்களின் உள்ளங்களிலும் நினைவுகளிலும் ஏற்கனவே நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளார்கள். - ஹாஸ்லிட்[1]
  • தலைசிறந்த மனிதனுக்கு மார்பளவுச் சிலை ஒன்றும், அவர் பெயருமே சின்னமாயிருக்கப் போதுமானவை. சிலையை விவரம் காட்டப் பெயர் மட்டும் போதாதென்றால், இரண்டுமே தொலையட்டும். - லாண்டர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நினைவுச்_சின்னம்&oldid=21894" இலிருந்து மீள்விக்கப்பட்டது